ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2015 12:05
சாத்தூர் : ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல்விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.35 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 26ல் கொடி ஏற்றத்துடன் சித்திரை பொங்கல்விழா துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் ஊர்வலம் நடந்தது. விழாவின் எட்டாம் நாளான மே 3ல் பொங்கல்விழா நடந்தது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ஏழாயிரம் பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த தேர் இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது. இன்று மஞ்சள்நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.