பதிவு செய்த நாள்
07
மே
2015
12:05
பவானி : பவானி, அம்மாபேட்டை கரியகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மாபேட்டையில் உள்ள மிகப்பழமையான கரியகாளியம்மன், மாரியம்மன், ஓம்காளியம்மன், கிட்டம்பட்டியம்மன் பரிவார தெய்வங்களுக்கு பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. கடந்த, 21ம் தேதி பூச்சாட்டுதலும், 22ம் தேதி முதல் கிராம சாந்தி செய்தல், கம்பம் நடுதல், அதனை அடுத்து காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. சாணாத்திகல் அம்மன், எல்லை தம்பிராயனுக்கு புணுகு, சந்தனம் மாற்றுதல், கரியகாளியம்மன் கோவில் குண்டம் கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று அதிகாலை குண்டம் இறங்கும் பக்தர்களோடு, பொங்காளிகரட்டில் உள்ள பெருமாள் கோவிலின் அருகில் இருந்து, முப்போட்டுடன் வானவேடிக்கைக்கு மத்தியில், அம்மை அழைத்து வரப்பட்டு, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று இரவு கம்பம் பிடுங்குதலும், நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.