பதிவு செய்த நாள்
08
மே
2015
11:05
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த ஏப்., 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில், வாகன சேவை நடந்தது. கடந்த 1ம் தேதி நடந்த கருடசேவை, 3ம் தேதி நடந்த திருத்தேர் ஆகியவை முக்கிய உற்சவமாக நடந்தன. நேற்று முன்தினம், நிறைவு உற்சவமாக, கேடய உற்சவம் நடந்தது. மாலையில், புஷ்ப யாகம், துவாதச ஆராதன சேவை நடந்தன. இரவில், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன், சுவாமி வீதியுலா சென்றார். அன்றைய உற்சவத்துடன், பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.