பதிவு செய்த நாள்
11
மே
2015
12:05
செஞ்சி: செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலனை சபை சார்பில் வைணவ ஆண்டு மாநாடு நடந்தது. செஞ்சி வட்ட மதுரகவி ஆழ்வார் பரிபாலன சபை சார்பில், 26வது ஆண்டு வைணவ மாநாடு செஞ்சி வள்ளி அண்ணாமலை மாளிகையில் நடந்தது. கடந்த 9ம் தேதி மாலை ராதா ருக்மணி சமேத கண்ணபிரான் சாமி வீதி உலா பஜனை கோஷ்டிகள் புடை சூழ நடந்தது. நேற்று இரண்டாம் நாள் மாநாட்டில் சபை தலைவர் வேணுகோபால் கருட கொடியேற்றினார். திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர் வெங்கடேசன் தொடக்க உரையாற்றினார்.
துணை தலைவர்கள் டாக்டர் அண்ணாமலை, டாக்டர் ரமேஷ் பாபு, செயலாளர் ராமச்சந்திரன் வைணவ அடியார்கள் ராமதாஸ், ரகுபதி, நாராயணசாமி, ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்தியா, பரந்தாமன் திருமால் துதி பாடினர். ஆதிமூலம் வரவேற்றார். ஜெயராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.
புதுச்சேரி கலியன் எத்திராஜன் சுவாமிகள், வந்தவாசி சீனிவாசன், வேலூர் ஹரிகேசவன், மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சார்ய சுவாமிகள், புதுச்சேரி பெருமாள், ஆசிரியை சாந்தலட்சுமி ஆகியோரின் சொற்பொழிவு நடந்தது. சுந்தர் நன்றி கூறினார். இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பஜனை கோஷ்டிகள், பகவத் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டிகள் கலந்து கொண்டனர்.