திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த வசதிகளை, அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிராகரித்தார். திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவருக்காக, சிறப்பு வசதிகளை தேவஸ்தானம் செய்து தருவது வழக்கத்தில் உள்ளது.
அதன்படி, இரண்டு விலை உயர்ந்த கார்; திருமலை, திருப்பதியில் தங்குவதற்கு மாளிகை; கோவில் முன் வாசல் வழியாக தரிசனம் என, அனைத்து வசதிகளும் வழங்கப்படும். இவற்றை, தற்போதைய அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ண மூர்த்தி நிராகரித்துள்ளார். திருமலையில் தங்க சாதாரண அறை; அன்னதான கூட உணவு; வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக தரிசனம் ஆகியவை எனக்கு போதும் என, அவர், தேவஸ்தான செயல் அதிகாரியிடம் தெரிவித்து உள்ளார்.