அவல் என்றால் கிருஷ்ணருக்கு கொள்ளை பிரியம். அதனால் தான் அவர், ஒரு பிடி அவல் சாப்பிட்டதும், ஏழை குசேலன் வீடு குபேரன் வீடானது. மீண்டும் ஒரு பிடி சாப்பிட, அவன் குழந்தைகள் எல்லாம் கல்விச் செல்வம் பெற்றனர். மூன்றாவது பிடி அவல் எடுத்த கிருஷ்ணரின் கையை ருக்மணி பிடித்தாள். காரணம், குசேலனுக்கே எல்லாம் போய் விடும் என்பதால் அல்ல. கிருஷ்ணர் கை பட்ட பிரசாத அவலை, தானும் சாப்பிட ஆசைப்பட்டதால்....!