பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதரிடம், அறிந்தோ, அறியாமலோ பாவம் செய்து விடுகிறேன். நீங்கள் மட்டும் பாவம் செய்யாமல் இருக்கிறீர்களே! எப்படி? என்று கேட்டார் ஒருவர். பயம் தான் காரணம் என்றார் ஏகநாதர். கடவுளின் அருள் பெற்ற நீங்களுமா பயப்படுகிறீர்கள்? என்று அவர் ஆச்சரியப்பட்டார். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் வரப் போவது உறுதி. பூமியை விட்டு ஒருநாள் நாம் செல்லத்தான் வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால், பாவத்தைப் பற்றி யோசிக்க கூட நேரமிருக்காது. மரண பயமே மனிதனைத் திருத்தும், என விளக்கம் அளித்தார்.