எல்லோரும் செல்வத்துக்கு அதிபதி குபேரன் என்பது வழக்கம். ஆனால், வருணன்தான் செல்வத்துக்கு அதிபதி, எப்படி? செல்வத்துக்கு அதிதேவதையான மகா லக்ஷ்மி கடலில் தானே தோன்றினாள். அந்த ஜலத்துக்கு அதிபதி வருணன்தானே. அதனாலே, செல்வத்துக்கும் அதிபதி என்பார்கள். வருணனின் திசை மேற்கு, ஆகையால்தான், தண்ணியை கொட்டாதே; கடன் வரும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அது மட்டுமல்ல; நாம் குளிக்கும்போது மேற்கு திசை நோக்கி குளித்தால் ரொம்பவே நல்லது. கடன் நிவர்த்திக்காக மேற்கு நோக்கி விளக்கேற்றச் சொல்வதும் இதனால்தான்!