எழுமலை : எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டி சவுண்டம்மன் கோயில் திருவிழாவிற்காக உத்தப்புரம் முருகன் கோயிலில் இருந்து கரகம் எடுக்கும் விழா நடந்தது. பூஜாரி கரகத்தை தலையில் தாங்கியபின், கைகளால் தொடாமல் 2 கி.மீ., துாரம் உள்ள கோட்டைப்பட்டி கோயிலுக்கு எடுத்து வந்தனர். கரகம் சாய்வது போல் தெரியும்போதெல்லாம் பக்தர்கள் தங்கள் உடலில் கத்தியால் வெட்டி, சரிவதை நிறுத்தி அழைத்து வந்தனர். பின் முளைப்பாரி, சக்தி நிறுத்துதல், மாவிளக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.