விழுப்புரம்: விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை வழிபாடு நடந்தது. வைகாசி கிருத்திகையையொட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள பாலமுருகனுக்கு நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு தீபாராதனை, 9:00 மணிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலித்தார். பின்னர் மாலை 6:00 மணிக்கு பாலமுருகன் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் குருக்கள் செந்தில் செய்திருந்தார்.