தீபம் ஏற்றுவது என்பது காலம் காலமாக அகல் விளக்குகள் அல்லது வெண்கலம் போன்ற உலோக விளக்குகள் ஏற்றுவதே வழக்கத்தில் இருந்து வரும் ஒன்றாகும். பின்நாளில் சில ஜோதிடர்கள் மற்றும் மாந்த்ரீகர்கள் துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கேற்றும் வழக்கத்தை கொண்டு வந்து இரு க்கிறார்கள். திருமணத் தடையை நீக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாக இன்றும் பல பெண்கள் நம்பிக்கையோடு எலுமிச்சம் பழ விளக்குகளை ஏற்றுகின்றனர். சில விஷயங்கள் நம்பிக்கை அடிப்படையில் நடந்து வருகிறது. திரியை ஒற்றையாக இட்டு விளக்கேற்றலாம்.