பதிவு செய்த நாள்
29
மே
2015
11:05
வடபழனி: வடபழனி ஆண்டவர் முருகனுக்கு, வைகாசி விசாக பால்காவடி திருவிழா, வரும், 31 மற்றும் ஜூன், 1ம் தேதி நடைபெற உள்ளது. வடபழனி, சன்னதி தெருவில், சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு, திருமுருகன் பக்த ஜன சபை சார்பில், 23ம் ஆண்டாக, வடபழனி ஆண்டவர் முருகனுக்கு, வைகாசி விசாக பால்காவடி திருவிழா நடைபெற உள்ளது.
அதில், வரும் 31ம் தேதி, மாலை 5:00 மணி அளவில், வடபழனி பெரியபாளையத்தம்மன் கோவிலில் இருந்து, சக்திவேலுடன் புறப்பட்டு, வடபழனி ஆண்டவர் திருக்குளத்தில் சக்திவேலுக்கு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து, அலங்காரத்துடனும், சக்திகலசத்துடனும், இரவு 7:00 மணி அளவில், வேங்கீஸ்வரர் கோவிலை வந்தடையும். பின்னர், அன்னதானம் நடைபெறும். அடுத்த நாள், காலை, 8:00 மணி அளவில், வேங்கீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சக்திவேல் பூஜை நடத்தி, பக்தர்கள் பால் குடங்களுடன் பால் காவடி, பூந்தேருடன் வீதி உலா சென்று, வடபழனி முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும்.