பதிவு செய்த நாள்
03
ஜூன்
2015
12:06
கடலூர்: புதுச்சேரி மாநிலம், பாகூர் கொம்யூன், மதிகிருஷ்ணாபுரம் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத பட்டாபிராம சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று (2ம் தேதி) காலை பகவத் அனுக்ஞை, புன்யாஹவாசனம், பிம்பசுத்தி திருமஞ்சனம், அ ங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி நடந்தது. இன்று (3ம் தேதி) காலை 7:00 மணிக்கு ரக்ஷா பந்தனம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி, சாற்றுமுறை, மாலை 4:00 மணிக்கு மூல மூர்த்திகள் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு முரளீதர சுவாமிகள் அருளுரையாற்றுகிறார். நாளை (4ம் தேதி) காலை 8:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, யாத்ராதானம், 10:30 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.