காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அலர்மேல் மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயில், வைகாசி திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில், காலை, இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில், வீதி <உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 7.55 மணிக்கு சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளினார்.