திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் அமைக்கப்பட்ட நிழற்பந்தல், திடீரென்று இடிந்து விழுந்தது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, சுபதம் மண்டபம் முதல் கோவில் முன் வாசல் வரை, நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. கோவில் நிர்வாகம், நிழற்ப ந்தலை கோடைக் காலம் முடிந்த பின் அகற்ற முடிவு செய்தது. நேற்று முன்தினம், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதில், நிழற்பந்தல் இடிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால், பந்தலின் கீழ் நிறுத்தப்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மழை நின்ற பின், ஊழியர்கள் விரைந்து சென்று பந்தலை அகற்றினர்.