தஞ்சாவூர்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், சுற்றுலாத்துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையம் சார்பில், இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், திருவையாறு சாமிநாதன் குழுவினரின் வீணை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் சுப்பையன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், பெரிய கோவில் கண்காணிப்பாளர் கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.