வில்லியனூர்:வில்லியனூர் பெருந்தேவி தாயார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் சம்ரோஷணம் 8ம் தேதி நடக்கிறது.இதையொட்டி இன்று (6ம் தேதி) மாலை 5:00 மணியளவில் முதற்கால யாக பூஜை துவங்குகிறது.
8ம் தேதி காலை 6:00 மணி முதல் 7:30 மணிக்கு கும்பாபிஷேம் (சம்ரோஷணம்) நடக்கிறது. நமச்சிவயாம் எம்.எல்.ஏ., தலைமை தாங்குகிறார். முதல்வர் ரங்கசாமி மற்றும் திருக்கோவிலூர் ஜீயர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் தேனீ ஜெயக்குமார், கார்த்திகேயன், திருப் பணி தொழில்நுட்ப குழு கண்காணிப்பு பொறியாளர் சத்திய மூர்த்தி, இளநிலை பொறியாளர்கள் செல்வராசு, சுப்ராயன் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ஹரிஹர நமோ நாராயணன், திருப்பணி கமிட்டி தலைவர் உலகநாதன் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.