காரைக்கால்: காரைக்கால் நெடுங்காடு மணல்மேடு கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. நெடுங்காடு மணல்மேடு கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி கோவிலில் நூதன விக்ரகம் புதிதாக அமைக்கப்பட்டு விநாயகர், முருகன், பெரியநாயகி, பாவடைராயன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கடந்த 7ம்தேதி அனுக்ஞை விநாயகர்பூஜை,கணபதி ஹோமம்,மகாலெட்சுமி ஹோமம்,கோபூஜைகளுடன் துவங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜைகள்,கடம்புறப்பாடு மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணல்மேடு கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.