பதிவு செய்த நாள்
09
ஜூன்
2015
11:06
திண்டிவனம்:தீர்த்தகுளம் திந்திரிணிவிநாயகர் மற்றும் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.திண்டிவனம் தீர்த்தகுளம் தென்கரையில் உள்ள திந்திரிணி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி பகல் 12:30 மணிக்கு கரிக்கோலம் நடந் தது. மாலை கணபதி பூஜையுடன், யாக சாலை பூஜைகள் துவங்கியது. மூலவர் திந்திரிணி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள், ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு சிலைகள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை 2ம் கால யாகசாலை பூஜை கள், பூர்ணாஹுதி முடிந்து, 10:50 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.தொடர்ந்து சுவாமிகளுக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பூஜைகளை ராதாகுருக்கள் தலைமையில், பாலாஜி, கணேசன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.விழாவில் நகராட்சி சேர்மன் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., சேது நாதன், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலர் மலர் சேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் , 9வது வார்டு கவுன்சிலர் சரவணன், முன்னாள் கவுன் சிலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தீர்த்தகுளம், ஏரிக்கோடி பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.