திண்டிவனம்:கீழ்மண்னூர் கிராமத்தில் தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மறுநாள் காலை இரண்டாம் கால பூஜைகள் பூர்ணாஹுதி முடிந்து, காலை 8:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை முன்னூர் வெங்கட்ராமன் அய்யர், ராஜகோபால் அய்யர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஸ்தபதி முன்னூர் காத்தவராயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.