மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) முயற்சியில் வெற்றி!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2015 12:06
பிறர் கருத்தை மதிக்கும் மிதுன ராசி அன்பர்களே!
ராசிக்கு 2ல் இருக்கும் குருபகவான் ஜூலை 5 வரை நன்மை தருவார். சுக்கிரன்,சனி மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பர். ஜூலை 5க்குப் பிறகு, 3-ம் இடமான சிம்மத்தில் குரு இருப்பது சிறப்பானதல்ல. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் உருவாகும். சுக்கிரன்,சனி பலத்தால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொருளாதாரம் சிறக்கும். ஜூன் 28க்கு பிறகு வீட்டினுள் பிரச்னை ஏற்படலாம். உறவினர் வகையில் வீண் விரயம் உண்டாகும். . சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அலைச்சல், சோர்வு ஏற்படலாம். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.
தொழில், வியாபாரத்தில் வருமானத்துக்கு குறைவிருக்காது. அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி நிதியுதவி பெற்று, விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஜூலை 15க்கு பிறகு நிர்வாகச் செலவு அதிகரிக்கும்.
பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். ஜூலை 2க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.
கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் நற்பெயரும், விரும்பிய பதவியும் கிடைக்க பெறலாம். புகழ் வளர் முகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால், விடாமுயற்சி தேவைப்படும்.
விவசாயிகள் கால் நடை மூலம் கூடுதல் வருமானம் காண்பர். நெல், சோளம், கடலை போன்ற பயிர்கள் வகையில் அதிக லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் இருப்பது கூடாது.
பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். திருமணம் விரைவில் கைகூடும். ஜூலை 2க்குள் சுக்கிரனால் ஆடம்பர பொருள் வாங்கலாம். ஜூலை 1,2ல் பிறந்த வீட்டு சீதனம் கிடைக்க பெறலாம்.
நல்ல நாள்: ஜூன் 17, 18, 22, 23, ஜூலை 1, 2, 8, 9, 10, 11, 14, 15
கவன நாள்: ஜூலை 3, 4, 5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4, 8 நிறம்: நீலம், வெள்ளை
பரிகாரம்: சூரியன், புதனை அர்ச்சித்து. கோதுமை, பாசிப்பயறு தானம் செய்யலாம். புதன் கிழமை சரஸ்வதியை வழிபட கல்வி வளம் பெருகும்.
பகிர்கcopied
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »