தியாகதுருகம்: குடியநல்லூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. தியாகதுருகம் அடுத்த குடிநல்லூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம் செய்து சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர். கண்ணன் பூசாரி பூஜைகளை செய்தார். தர்மகர்த்தா பெரியதம்பி, ஊராட்சி மன்ற தலைவர்மணிவேல், முருகன், சின்னராசு, கந்தசாமி, பழனி, தேவராஜ், ஆறுமுகம், ராஜா கலந்து கொண்டனர்.