ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று நடந்த அமாவாசை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு, 11:00 மணியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மாசாணிஅம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த கோயிலின் சிறப்பு அம்சமான, எண்ணெய் காப்பு சாத்துதல் நேற்று நடந்தது. அத்துடன் மாசாணியம்மனின் உற்சவ சிலைக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைப்பெற்றன.காலை, 6:30 மணிக்கு முதல் பால் அபிேஷகத்துடன் பூஜைகள் துவங்கின. இதையடுத்து மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்கள் வசதிக்காக, பொள்ளாச்சியிலிருந்து போக்குவரத்து துறை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.