Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ராமகிருஷ்ண மடம் சாரதா ... சிதம்பரம் கோவிலில் ஆனி தேரோட்டம்! சிதம்பரம் கோவிலில் ஆனி தேரோட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனி தேரோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனி தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
05:06

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் ஆனித்திருவிழா தேரோட் டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் சிவன் ஆருத்ரா தரிசன நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிரசபை நெல்லையப்பர் கோயிலில் உள்ளது. பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபையை போன்று, தாமிரபரணிக்கரையில் ராஜவல்லிபுரத்தில் உள்ள அழகிய கூத்தர் ஆலயமும் சிறப்புடையது. வயல்வெளிகளில் அமைந்துள்ள இந்த தலம், மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாமதேவரிஷி, மணப்படைவீடு அரசன் ஆகியோருக்கு நடன தரிசனம் கொடுத்த சிறப்புடைய தலமாகும். இங்கு செப்புதகடுகளால் வேயப்பட்ட கூரையை கொண்ட கோயில் கொண்டுள்ளார். அழகிய கூத்தர் ஆலயம் என்றழைக்கப்படும் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அழகிய கூத்தருக்கு திருவாதிரை அபிசேகமும் உருகு சட்டசேவை சாத்தி சிறப்பு தரிசனமும் நடந்தது. 9ம் திருவிழாவான காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின் தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 ரதவீதிகளையும் சுற்றி தேர் நிலையம் வந்தடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar