பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
10:06
பள்ளிக்கரணை: ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ஒரு நாள் பிரம்மோற்சவம் நேற்று நடந்தது. பள்ளிக்கரணையில், சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், நேற்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளின் உற்சவர்கள் கொடி மண்டபத்தில் எழுந்தருளினர். பின், கொடிமரத்திற்கு பூக்கள் கொண்டு பூஜையும், தீபாராதனை செய்யப்பட்டது. மாலை 4:00 மணிக்கு, சாந்தநாயகி அம்மனுக்கு திருமண கோலத்தில் பெண் அழைப்பு நடைபெற்றது. ஆதிபுரீஸ்வரரும், சாந்த நாயகியும் மாலை மாற்றி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், இருவரும், மண மேடையில் எழுந்தருள திருமண சடங்குகள் நடைபெற்று தீபாராதனை செய்யப்பட்டது. இரவு 8:00 மணியளவில், ஆதிபுரீஸ்வரர் திருவீதி உலா நடைபெற்றது. அதில், சுவாமி மற்றும் அம்மன் இருவரின் உற்சவர்களுடன் பஞ்சமூர்த்திகளின் உற்சவர்கள் சிலைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
*சைதாப்பேட்டை திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேசுவரர் கோவிலில், ஆனித்திருவிழாவை முன்னிட்டு, பூப்பல்லக்கு சேவை நடந்தது.
*திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், நரசிம்மர் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
*கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.