சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் தரிசனத்தையொட்டி ஓமக்குளம் நந்தனார் கல்விக் கழகம் சார்பில் நந்தனார் திரு உ ருவச்சிலை ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் ஓமக்குளம் சிவலோகநாதர் கோவில் வளாகத்தில் இருந்து நாதஸ்வர கச்சேரியுடன் துவங்கியது. நந்தனார் கல்விக் கழம் செயலாளர் ராமமூர்த்தி துவக்கி வைத்தார். முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் ஓமக்குளம் கோவிலை அடைந்தது. நிகழ்ச்சியில் நந்தனார் கல்விக் கழக நிர்வாகிகள் பழனிவேல், டாக்டர் வெற்றிவீரமணி, ரத்தினசாமி, நமச்சிவாயம், தாமோதரன், பக்தவச்சலம், திராவிடமணி, அன்பழகன், ஜெயச்சந்திரன் பங்கேற்றனர்.