கடலூர்: கடலூர், புதுவண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவில் 5ம் ஆண்டு பூர்த்தியையொட்டி ஸ்ரீநவதுர்கா யாகவேள்ளி மற்றும் 108 விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, ஸ்ரீநவதுர்கா மூலமந்த்ர யாக வேள்ளி நடந்தது. காலை 10:00 மணிக்கு பூர்ணாஹூதி பூஜை, அம்பாளுக்கு கலசாபிஷேகம் நடந்தது.11:00 மணிக்கு ஸ்ரீசக்ரமாமேருவுக்கு நவாவர்ண பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலை 7:00 மணிக்கு 108 விளக்கு பூஜை நடந்தது. சிவசக்தி நாகம்மன் கோவில்: கடலூர் வண்டிப்பாளையம் சாலை, சிவா நகரில் உள்ள சிவசக்தி நாகம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2ம் ஆண்டு பூர்த்தியையொட்டி விளக்கு பூஜை நடந் தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமம்,1 0:00 மணிக்கு சிவசக்தி நாகம்மனுக்கு சிறப்பு ஹோமம், கலசாபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு விளக்கு பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது.