பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
11:06
மாடம்பாக்கம்:மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில், தொல்லியல் துறை சார்பில், கருங்கல் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சேலையூர், மாடம்பாக்கத்தில், தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலில், வெளி பிரகாரத்தை சுற்றி, கருங்கல் நடைபாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.கோவில் பிரகாரத்தின் வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் பிரகாரத்தை ஒட்டி எட்டு அடிக்கும், கிழக்கு பகுதியான கோவிலின் முகப்பு பக்கத்தில் அலுவலகம், பிரகாரம் முழுவதும் கருங்கல் நடைபாதை அமைக்கப்படுகிறது.கோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டுள்ள கருங்கற்களை பதிப்பதற்கு முன், மண் தரையில் கல் பதிக்கும் அளவிற்கு பள்ளம் எடுக்கப்பட்டு, பொடிகற்கள் கொண்டு, நடைபாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெறுகின்றன. தொல்லியல் துறை சார்பில், இந்த பணிகள் நடைபெறுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.