நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் 29 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி பிரதிஷ்டை நடக்கிறது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் ராமாயண தரிசன காட்சி கூடம் அமைகிறது. மூன்று ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த காட்சி கூட்டத்தில் பாரத மாதாவுக்கு கோயிலும் அமைகிறது. இதன் நுழைவு வாயிலில் 29 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. இச்சிலையை மகாபலிபுரத்தில் சிற்பி தட்சிணாமூர்த்தி வடிவமைத்தார். 25 டன் எடை கொண்ட இச் சிலை லாரி மூலம் கொண்டு வரப்பட்டு ’கிரேன்’ உதவியுடன் இறக்கப்பட்டது. ஏழு அடி உயர பீடம் கட்டப்பட்டு, அதன் மீது 22 அடி உயர சிலை அமைக்கப்படுகிறது. வரும் 13-ம் தேதி பிரதிஷ்டை நடைபெறுகிறது.