திருக்கடையூர் பெருமள் கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2015 12:06
நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூரில் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான ஸ்ரீ அமிர்தநாராயணபெருமள் கோயில் அமைந்துள்ளது.மறைந்திருந்த அமிர்தத்தினை வெளிக் கொண்டு வந்ததால் பெருமாள் அமிர்தநாராயணன் என்ற பெயர் பெற்றார். இக்கோயில் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படுகிறது. சிதிலமடைந்திருந்த இந்த கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை அமைச்சர் ஜெயபால் தலைமையில் திருக்கடையூரில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் பழனிசாமி,பூம்புகார் எம்.எல்.ஏ.பவுன்ராஜ், அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெகதீசன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசு மற்றம் பொது மக்களின் ஒத்துழைப்புடன் ரூ 40 லட்சம் செலவில் விரைந்து திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.