மற்ற தெய்வங்களுக்கு மந்திர பிரதிஷ்டை தேவைப்படும். ஆனால், சாணம், மஞ்சள், சந்தனம் என எதைப் பிடித்து வைத்தாலும் போதும். அங்கே பிள்ளையார் எழுந்தருளி விடுவார். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று இதைச் சொல்வது உண்டு. யானைமுகம் கொண்டவர் என்பதால் குழந்தைகளுக்கு இவரை எளிதில் அறிமுகப்படுத்தி விடலாம். குழந்தைக் கடவுள் என்பதால், இவர் முதற்கடவுள் ஆகி விட்டார்.