மகாபாரத யுத்தம் அக்டோபர் மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று துவங்கியதாக டாக்டர் பி.வி.வர்த்தக் என்ற கணித ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். ஜோதிட கணிதவியலைக் கொண்டு மகாபாரதம், ராமாயணம் ஆகியவை நடந்த காலங்களில் உள்ள கிரக நிலைகளைக் கொண்டு இந்த நாட்களை கணக்கிட்டதாக அவர் கூறுகிறார். கிறிஸ்து பிறப்பதற்கு 5561 வருடங்களுக்கு முன் அதாவது கி.மு.5561, அக்டோபர் 16ம் தேதி ஞாயிறன்று குருஷேத்ர யுத்தம் தொடங்கியதாக அவர் சொல்கிறார்.