ஆண் யானையாக இருந்தால் விநாயகராகவும், பெண் யானையாக இருந்தால் கஜ லட்சுமியாகவும் பூஜிப்பர். சிற்ப சாஸ்திரப்படி, கோவிலில் கோசாலை என்னும் மாட்டுத் தொழுவமும், யானைக் கொட்டகையும் குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட வேண்டும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, கோபூஜை செய்தால் அக்கோவிலுக்கு எல்லா தேவர்களும் வந்து அருள்புரிவதாக ஐதீகம். இந்த பூஜைகளால் பக்தர்களின் விருப்பம் தடையில்லாமல் நிறைவேறும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.