வடமதுரை: அய்யலுõர் வண்டிகருப்பண சுவாமி கோயில் சிதறு தேங்காய் சேகரிப்பு, வாகனங்களை பாதுகாக்கும் வசூல் உரிமம் ஏலம் முடிவிற்கு வந்தது. திண்டுக்கல்- திருச்சி நான்குவழிச்சாலையில் அய்யலுõர்- தங்கம்மாபட்டி இடையே வண்டி கருப்பணசுவாமி கோயில் உள்ளது. கடந்த மாத ஏலத்தில் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் எறிந்து செல்லும் காசுகளை சேகரிக்கும் ஏலம் ரூ.4.80 லட்சத்திற்கு எடுக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் உடைக்கும் சிதறு தேங்காய் சேகரிப்பு, வாகனங்களை பாதுகாப்பு வசூல் உரிமம் ஏலம் போகாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான மறுஏலம் இந் துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் ஏலம் நடந்தது. செயல்அலுவலர் வேலுச்சாமி, பரம்பரை தர்ம கர்த்தா ரெ ங்கநாதன் முன்னிலை வகித்தனர். இதில் சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமத்தை கொல்லப்பட்டி ராமச்சந்திரன் ரூ.1.22 லட்சத்திற்கும், வாகனங்கள் பாதுகாக்கும் வசூல் உரிமத்தை குப்பாம்பட்டி மணி ரூ.62 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்தனர்.