Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாத்தூர் வெங்கடாஜலபதி கோயிலில் ... சூலூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா! சூலூர் சக்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆபரேஷன் சிவா.. அதிரடி அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
ஆபரேஷன் சிவா.. அதிரடி அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு!

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2015
10:07

ஜம்மு: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, ஆபரேஷன் சிவா என்ற பெயரில், அதிரடி வேட்டையை ராணுவம் துவக்கிஉள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, அமர்நாத் குகை கோவிலில், மே - ஆகஸ்ட் மாதங்களில் பனிக்கட்டியிலான சிவலிங்கம் உருவாவது வழக்கம். இதை தரிசிப்பதற்காக, ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். அடர்ந்த மலைப் பிரதேசத்தில் இந்த குகை கோவில் இருப்பதால், யாத்திரை செல்வோருக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுதல் தொடருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான யாத்திரை நேற்று துவங்கியது. 1,280 பக்தர்கள் அடங்கிய முதல் குழுவினர், ஜம்முவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே, அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் அடங்கிய பயங்கர வாதிகள் குழு, ஏராளமான ஆயுதங்களுடன், பாகிஸ்தானில் இருந்து, காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளதாக உளவு அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, யாத்திரைக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஆபரேஷன் சிவா என்ற பெயரில், அதிரடி நடவடிக்கையை இந்திய ராணுவம் துவக்கிஉள்ளது. இதன்படி, 7,500 வீரர்கள், யாத்திரை நடக்கும் பாதை முழுவதும் துப்பாக்கிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் தவிர, மேலும், 10 ஆயிரம் பேர் அடங்கிய பாதுகாப்பு படையினர், பக்தர்கள் மற்றும் கோவில் பாதுகாப்புக்காக பணிஅமர்த்தப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar