பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
11:07
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், குருப்பெயர்ச்சி யாகம் நடந்தது. உடுமலை சக்தி விநாயகர் கோவில், கொழுமம் தாண்டவேஸ்வர சுவாமி, கணியூர் ஐயப்பன் கோவில்களில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, குருபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. உடுமலை சக்தி விநாயகர் கோவிலில், நேற்றுமுன்தினம் மாலை, கலச ஸ்தாபிதம், கணபதி ேஹாமம், 108 வலம்புரிச்சங்கு ஸ்தாபிதம், சங்கு பூஜை, சிறப்பு ேஹாமங்கள் நடந்தன. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சர்வஜன லட்சார்ச்சனை செய்தனர். இரவு குருபகவான், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்திக்கு, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், திருமஞ்சனபொடி, சந்தனம், திருநீர் அபிேஷகங்களும், 108 வலம்புரிச் சங்காபிேஷகமும் நடந்தது.தொடர்ந்து, அலங்காரம், தீபாராதனை, அர்ச்சனையும், இரவு, 10:00 மணிக்கு, குருபகவானுக்கு குடும்ப யாகம் நடந்தது.
மடத்துக்குளம், கொழுமம், சங்கராமநல்லுாரில் உள்ள தாண்டவேஸ்வர சுவாமி, கல்யாண வரதராஜ சுவாமி கோவிலில், குருபகவானுக்கு, அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனையும், இரவு, 11.02 மணிக்கு, மகா தீபாராதனையும் நடந்தது. கணியூர் ஐயப்பன் கோவிலில், நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணி முதல், 8:30 மணி வரை, மகா கணபதி ேஹாமம், மகா சங்கல்பம், குருஆவாஹனம், மகா தீபாராதனை நடந்தது. குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, பரிகாரங்கள் செய்யப்பட வேண்டிய ராசியினர், கோவில்களில் நடந்த யாகத்தில் பங்கேற்று குருபகவானை வழிபட்டனர்.