Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

குருவாயூரப்பன் நமஸ்காரம்! குருவாயூரப்பன் நமஸ்காரம்! பெரிய கருப்பர் போற்றி! பெரிய கருப்பர் போற்றி!
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
முன்னோடிக் கருப்பர் துதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2015
16:36

வேஷ்டியும் லேஞ்சம் தரித்து தடிக்கம்பு மேலெடுத்து
தோட்டி கருப்பன் எனப் பெயருஞ் சொல்லி - தொடர்ந்திரவில்
பாட்டுரை சிற்றம்பலக் கவிராயர் முன்பற்று வழி
காட்டிய சிங்கைத் துரையே முன்னோடி என்காவலனே!

படுக்கும் பொழுதும் நடக்கும் பொழுதும் பரிந்த சனுகு
தொடுக்கும் பொழுதும் த்ரேக தியானம் தொழும் பொழுதும்
அடுக்கும் பொழுதும் என் சிந்தை உன்பால்
கருணைப் பிரதாப முன்னோடி மகாதெய்வமே!

நீட்டிய கைதனில் பாயந்தோடி அந்த நிமிடந்தனில்
நாடிய காரியம் உனைப்போல் முடிக்க வல்லாரு முண்டோ
கோட்டி செய்யும் வலுப்பேய்களை சங்கிலி கொண்டுகட்டி
மாட்டிய உக்கிரதீரா முன்னோடி மகாதெய்வமே!

கல்லாத நெஞ்சரை ஈயாஉலுத்தர் கசடர் தம்மை
சொல்லான செந்தமிழாற் பாடிஎன்றுமே யான்துதித்து
செல்லாமற் சிந்தையில் எண்ணும்படிக் கருள் செய்திடுவாய்
வல்லார்க்கு வல்லதோர் தீரா முன்னோடி மகாதெய்வமே

மண்ணோடிவந்து வணங்கு கருப்பண்ணர் மகிழ்
முன்னோடி ஒன்று மொழியக்கேள் - என்பேரில்
நீபக்ஷம் வைத்து நான்நினைத்த படியே கிருபை
தாபக்தன் மேல்விரும்பித் தான்.

செங்கீரை முன்னோடிக் கருப்பர்

செங்கீரை என்கின்ற சிங்கார சிற்றூரில்
சீர் கொண்டிலங்கும் தேவா!

எங்குலம் காக்கவும் இன்னல்கள் தீர்க்கவும்
வெண்புரவி ஏறிவா! வா!
ஆடுடன் சேவலும் பொங்கலும் வைத்துமே
ஆண்டாண்டு பூசை வைப்போம்

பீடுடன் தரணியில் பெருவாழ்வு பெற்றிட
பேரருளை நீயும் தா! தா!

கையிலொரு அரிவாளும் கனத்த பெருமீசையும்
கண்டதும் நடுங்கவைக்கும்!

பொய்மையும் தீமையும் போயொழிந்தனுதினம்
வாய்மையே முன்பு நிற்கும்!

முன் ஓடிவரும் வினை தீர்ப்பதால் தான் உன்னை
முன்னோடி கருப்பனென்றார்!

முன்னோடி கருப்பனே! முன் வந்து பணிகிறோம்!
உனதருள் தந்து காப்பாய்!

காக்கும் தெய்வம்

காக்கும் தெய்வமே - எங்கள்
கருப்ப தெய்வமே - நாங்கள்
நோக்கும் இட மெல்லாம்
உந்தன் வீரத்தோற்றமே    (காக்கும்)

அள்ளிச் சொருகிய - மலர்
அழகுக் கொண்டையும் - வளர்
துள்ளு மீசையும் - உந்தன்
எழிலைக் கூட்டுதே    (காக்கும்)

பகையழித்திடும் - சிறந்த
பரந்த தோள்களும் - நல்ல
கருத்த மேனியும் - உந்தன்
வலிமை காட்டுதே.    (காக்கும்)

காடு வீடெல்லாம் - உந்தன்
காவலில் உண்டு - உயர்
படி பதினெட்டு - <உந்தன்
பார்வையிலுண்டு    (காக்கும்)

ஜாதி மல்லிகை - உயர்
சாந்து ஜவ்வாது - மணக்கும்
சாம்பி ராணியும் - உந்தன்
வரவைக் கூறுதே        (காக்கும்)

சாய வேட்டியும் - உயர்
ஜரிகைப் பட்டுமே - உந்தன்
மேனி அழகிலே - தவழ்ந்து
மின்னிச் சொலிக்குதே    (காக்கும்)

வெள்ளைக் குதிரையும் - உயர்
வீச்சரி வாளும் - நல்ல
தண்டை கிண்கிணி முழங்க
இங்கு வாருமே        (காக்கும்)

சுழன்றா டிடும் - அழகுச்
சுக்கு மாந்தடி - எடுத்து
விளையாடியே - ஐயா
ஓடி வாருமே        (காக்கும்)

கெட்டி மேளமே - கொட்டி
உனை யழைக்கவே -இந்த
செட்டி மக்களாம் - நாங்கள்
சேர்ந்து வணங்கிடும்     (எங்கள் காக்கும்).

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே
சங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple
காப்பு

கார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்
கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்
பார்மேவு ... மேலும்
 
temple
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்
திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்ட
அருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்
வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்ட
அயல்நிற்கும் ... மேலும்
 
temple
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கை
தரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்து
உமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.