எல்லைக்காளி அம்மன் கோவிலில் 24ம் தேதி செடல் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2015 11:07
கடலூர்: கடலூர், பழைய வண்டிப்பாளையம், காளவாய் தெருவில் உள்ள எல்லைகாளி அம்மன் கோவிலில் 115ம் ஆண்டு செடல் திருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி வரும் 23ம் தேதி வேம்பு அரசு திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. 10:00 மணிக்கு மேல் அம்மனுக்கு கலச அபிஷேகம் மகா தீபாராதனையும், நவக்கிரக கும்பாபிஷேகமும்; தொடர்ந்து 11:00 மணிக்கு மேல் வேம்பு அரசு திருக்கல்யாணம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு மேல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் எல்லைக்கட்டு உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கோவிலில் இருந்து ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலுக்கு வரிசை எடுத்துச் சென்று, அங்கு பெண்ணையாற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கரகங்களை அலங்கரித்து ஊற்றுக்காட்டு மாரியம்மனுடன் வீதியுலாவாக கோவிலு க்குகொண்டு வரப்படுகிறது. பகல் 1:00 மணிக்கு மேல் அம்மனுக்கு 1008 குடம் நீர் அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு மகா தீபாராதனையும், பின்னர் சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது. 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.