பதிவு செய்த நாள்
17
ஜூலை
2015
11:07
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, வஸ்திர மரியாதை நேற்று, திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்தில், ஆனி விழா, ஆடி மாதம் முதல் தேதி துவங்கும். இதையொட்டி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருந்து, ஆண்டுதோறும் ஆடி மாதம், திருப்பதி தேவஸ்தானத்துக்கு, வஸ்திர மரியாதை செல்வது வழக்கம்.இதையொட்டி நேற்று காலை, 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள், பெருமாளின் வஸ்திரங்கள், ஸ்ரீரங்கம் ஆண்டாள்கோவில் யானை மீது வைத்து எடுத்து கொண்டு, பட்டர்கள் உடன் செல்ல உத்திர வீதிகளில் வலம் வந்து ரங்கா, ரங்கா கோபுரத்தை அடைந்தது.பிறகு, வஸ்திர மரியாதை திருப்பதிதேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.