Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிராணனைக் கையாள்வது எப்படி? மனிதன் மனிதன்
முதல் பக்கம் » தைத்திரீய உபநிஷதம்
பிரணவ தியானம்
எழுத்தின் அளவு:
பிரணவ தியானம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
02:07

பிரணவ தியானம்: ஓமிதி ப்ரஹ்ம ஓமிதீதக்ம் ஸர்வம் ஓமித்யேததனுக்ருதி
ஹஸ்ம வா அப்யோச்ராவயேத்யாச்ராவயந்தி ஓமிதி ஸாமானி
காயந்தி ஓக்ம்சோமிதி சஸ்த்ராணி சக்ம்ஸந்தி ஓமித்யத்வர்யு:
ப்ரதிகரம் ப்ரதிக்ருணாதி ஓமிதி ப்ரஹ்மா ப்ரஸௌதி
ஓமித்யக்னிஹோத்ரமனுஜானாதி ஓமிதி ப்ராஹ்மண:
ப்ரவக்ஷ்யன்னாஹ ப்ரஹ்மோபாப்னவானீதி ப்ரஹ்மைவோ
பாப்னோதி //8//

ஓம் இதி - ஓங்காரமே; ப்ரஹ்ம - கடவுள்; ஓம் இதி - ஓங்காரமே; இதம் ஸர்வம் - இவை அனைத்தும்; ஓம் இதி ஏதத் - ஓம் என்பது; அனுக்ருதி: - ஆகட்டும் என்பதற்கு; ஹஸ்ம வை- பிரபலமானது; அபி - மேலும்; ஓ ச்ராவய - கேள்; இதி - என்று; ஆச்ராவயந்தி - கேட்கச் செய்கிறார்கள்; ஓம் இதி - ஓம் என்று; ஸாமானி - சாம கானம்; காயந்தி - பாடுகின்றனர். ஓம் சோம் இதி - ஓம் சோம் என்று, சஸ்த்ராணி - ரிக்வேத மந்திரங்கள்: சம்ஸந்தி - சொல்கின்றனர்; ஓம் இதி - ஓம் என்று; அத்வர்யு - யாகம் செய்பவர்; ப்ரதிகரம் - மறுமொழி; ப்ரதிக்ருணாதி - கூறுகிறார்; ஓம் இதி - ஓம் என்று; ப்ரஹ்மா - தலைமைப் புரோகிதர், ப்ரஸௌதி - சம்மதம் தெரிவிக்கிறார்; ஓம் இதி - ஓம் என்று; அக்னிஹோத்ரம் - அக்னிஹோத்ரம் செய்வதற்கு; அனுஜானாதி - அனுமதி அளிக்கிறார்; ஓம் இதி - ஓம் என்று; ப்ராஹ்மண; - தூயவர்கள்; ப்ரவக்ஷ்யன் - வேத பாடத்தின் ஆரம்பத்தில் ; ஆஹ - ஓதுகிறார்கள்; ப்ரஹ்ம - கடவுளை; உபாப்னவான் -  அடைய வேண்டும்; இதி - என்று; ப்ரஹ்ம ஏவ - கடவுளையே; உபாப்னோதி - அடைகிறான்.

8. ஓங்காரமே கடவுள் ஓங்காரமே இவை
அøனைத்தும் ஆகட்டும் என்பதற்கு ஓம்
என்கிறார்கள். கேள் என்று சொல்லும்போது,
கேட்கிறேன் என்று பதில் சொல்வதற்கும் ஓம்
என்கிறார்கள். ஓம் என்று தொடங்கியே சாம கானம்
பாடப்படுகிறது. ஓம் சோம் என்று ஆரம்பித்தே
ரிக்வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. யாகத்தின்
தலைவர் கேட்கும்போது யாகம் செய்பவர் ஓம்
என்றே மறுமொழி அளிக்கிறார், தலைமைப்
புரோகிதர் ஓம் என்றே தனது சம்மதத்தைத் தெரி
விக்கிறார் அக்னி ஹோத்ரம்  முதலான கிரியை
களுக்கு ஓம் என்றே அனுமதி அளிக்கிறார். கடவுளை
அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தம்மை
அணுகின்ற மாணவர்களுக்கு வேதபாடம்
ஆரம்பிக்கும்போது தூயவர்கள் ஓம் என்றே கூறு
கிறார்கள். ஓம் என்று ஓதி பயிற்சியை ஆரம்பிக்கின்ற
மாணவன் இறைவனை அடைகிறான்.

பிரணவ தியானம் பற்றி இங்கே கூறப்படுகிறது. இது பிரணவ மந்திரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்டபோது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனியே, அன்று முதல் இன்று வரை இது எங்கும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் யோகிகள் இதனைக் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
யாராலும் எழுப்பப்படாத ஓசை ஆதலால் இது அனாஹத த்வனி எனப்படுகிறது. ஓங்காரமும் அதன் உபாசனை முறையும் நமது உபநிஷதங்களில் சிறப்பாக கூறப்படுகின்றன.

இங்கே பிரணவ மந்திரத்தின் இரண்டு பரிமாணங்கள் பேசப்படுகின்றன. இது இந்த உபநிஷதத்தின் சிறப்பு அம்ச மாகும். முதல் இரண்டு வரிகள் ஓங்காரத்தின் உயர் பரிமாணத்தைக் கூறுகிறது. அதாவது ஓங்காரம் எங்கும் நிறைந்ததாக, அதுவே கடவுள் என்ற நிலையில் பேசப்படுகிறது. தொடரும் வரிகள், அன்றாட வாழ்க்கையில் கூட அந்த மந்திரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஆம் என்று சொல்வதற்கும், அனுமதி அளிப்பதற்கும் ஓம் என்று சொல்வதாக மந்திரம் குறிப்பிடுகிறது. இதன்மூலம், அன்றாட வாழ்க்கையில் நாமும் அந்த மந்திரத்தைப் பயன்படுத்த முடியும். இவ்வாறு எப்போதும் ஓங்காரத்தை ஜபிக்க முடியும் என்று ஓங்கார தியானத்தின் ஒரு செயல்முறைப் பரிமாணத்தை இந்த மந்திரம் குறிப்பிடுகிறது.

9. பன்னிரு ரத்தினங்கள்:

மாணவப் பருவத்திலிருந்து வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்குப் புகுமுன் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய ரத்தினங்கள் போன்ற 12 நல்லொழுக்கக் கோட்பாடுகள் இங்கே கூறப்படுகின்றன. இந்த தகுதிகளுடன் ஒருவன் சமுதாயத்தில் வாழும்போது நல்ல சமுதாயம் உருவாக்கப்படுகிறது. எனவேதான் இந்தப் பன்னிரு கோட்பாடுகளும் வாழ்க்கைக் கல்வியின் அம்சமாக வைக்கப்பட்டுள்ளன.

ரிதம் ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச ஸத்யம் ச ஸ்வா
த்யாய ப்ரவசனே ச தபச்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச தமச்ச
ஸ்வாத்யாய ப்ரவசனே ச சமச்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச
அக்னயச்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச அக்னிஹோத்ரம் ச
ஸ்வாத்யாய ப்ரவசனே ச அதிதயச்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச
மானுஷம் ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச ப்ரஜா ச ஸ்வாத்யாய
ப்ரவசனே ச ப்ரஜனச்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச ப்ரஜாதிச்ச
ஸ்வாத்யாய ப்ரவசனே ச ஸத்யமிதி ஸத்யவசா ராதீதர: தப இதி
தபோநித்ய: பௌருசிஷ்ட்டி: ஸ்வாத்யாய ப்ரவசனே ஏவேதி
நாகோ மௌத்கல்ய; தத்தி தபஸ் தத்தி தப: //9//

ரிதம் - ரிதம்; ஸ்வாத்யாய ப்ரவசனே ச - கற்றலும் கற்பித்தலும்; ஸத்யம் - உண்மை; தப; - தவம்; தம; - புலக்கட்டுப்பாடு; சம - அமைதி; அக்யை: - வேள்விகள்; அக்னிஹோத்ரம் - அக்னிஹோத்ரம்; அதிதய - விருந்தினர். மானுஷம் - மனிதகுல நன்மை; ப்ரஜாதி: - பேரப் பிள்ளைகள்; ஸத்யவசா: - சத்திய வாக்கு உடையவரான; ராதீதர: - ராதீதர முனிவர்; ஸத்யம் இதி - சத்தியமே என்று; தபோநித்ய; - தவத்தில் நிலைபெற்றவரான; பௌருசிஷ்ட்டி; - பௌருசிஷ்ட்டி முனிவர்; தப; இதி - தவமே என்று; மௌத்கல்ய: - முத்கலரின் மகனான; நாக: - நாக முனிவர்; ஸ்வாத்யாய ப்ரவசனே ஏவ - கற்றலும் கற்பித்தலுமே; இதி - என்று; தத் ஹி - அதுவே; தப; - தவம்.

9. கற்றலும் கற்பித்தலும் முக்கியக் கடமைகள்.
அவற்றுடன் ரிதம்,சத்தியம், தவம், புலக்கட்டுப்
பாடு, அமைதி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும். வேள்விகளும் அக்னிஹோத்ரமும்
செய்யப்பட வேண்டும். விருந்தினரைப் பேண
வேண்டும். மனிதகுலத்திற்கு நன்மை தரும்
செயல்களைச் செய்ய வேண்டும். நல்ல மக்களைப்
பெற வேண்டும். நல்ல பிள்ளைகள், பேரப்
பிள்ளைகள் என்று நல்ல சந்ததியை உருவாக்க
வேண்டும்.

சத்திய வாக்கு உடையவரான ராதீதர முனிவர் சத்தியமே முக்கியம் என்றார் தவத்தில் நிலைபெற்றவரான பௌருசிஷ்ட்டி முனிவர் தவமே முக்கியம் என்றார். முத்கலரின் மகனான நாக முனிவர் கற்றலும் கற்பித்தலுமே முக்கியம்
என்று கூறினார். ஏனெனில் அதுவே தவம், அதுவே தவம்.

கற்பதும் கற்பிப்பதும்தான் மாணவப் பருவத்தில் ஒருவன் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமை. அவன் கற்க வேண்டும். இளையவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இது அவனது முக்கியக் கடமை என்பதை வலியுறுத்துவதற்காக மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.

பாடங்களைக் கற்பதுடன் அவன் தன்னை ஒரு நல்ல மனிதனாக உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும். அதற்கு அடிப்படைத் தேவைகளாக இந்த உபநிஷதம் கூறுகின்ற ரத்தினங்கள் போன்ற பன்னிரு கோட்பாடுகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. ரிதம்: சற்றே அமைதியாக நின்று கவனிப்பவர்களுக்கு, இந்தப் பிரபஞ்சம் ஒரு மாறாத ஒழுங்குமுறையுடன் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவரும். இந்த ஒழுங்குமுறையே ரிதம். பிரபஞ்ச வெளியில் கோடானு கோடிஒளிக்கோளங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் ஒன்றின்மீது ஒன்று மோதாமல் ஒழுங்குமுறையுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பூமியை எடுத்துக்கொண்டால், உரிய காலங்களில் பருவங்கள் மாறுவதும், காற்று வீசுவதும், மழை பொழிவதும் அனைத்தும் ஓர் ஒழுங்கு முறையுடன் நிகழ்கின்றன.

இதனைப் புரிந்துகொண்டு வாழும்போது இயற்கை நமக்கு அனுகூலமாக அமைகிறது. மாறாக, இந்த ஒழுங்குமுறைக்குப் பாதகமாக வாழும்போது இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள நேர்கிறது. எனவே இயற்கையின் திட்டத்தைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும். (ரிதம் என்பது வேதச் சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கருத்துக்களுள் ஒன்றாகும். ரிக்வேதத்தில் மட்டும் சுமார் 600 இடங்களில் இந்தக் கருத்து விளக்கப்படுகிறது.)

2. உண்மை: உண்மை என்பதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். யாருக்கும் தீமை விளைவிக்காத சொல்தான் உண்மை (வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.-திருக்குறள். 291.) என்று திருக்குறள் கூறுவதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உண்மை பேச வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும்; இனிய தல்லாத உண்மையைப் பேசக் கூடாது. உண்மை அல்லாத இனியதையும் பேசக் கூடாது. இதுவே சான்றோர்கள் காலங்காலமாகக் கடைப்பிடிக்கின்ற தர்மமாகும் (ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம் ப்ரியம் ச நான்ருதம் ப்ருயாத் ஏஷ தர்ம: ஸனாதன; மனு - 4.138.) என்றே மனுதர்மமும் சொல்கிறது. இத்தகைய பேச்சை வாக்கினால் செய்கின்ற தவம். என்கிறது கீதை (அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே - கீதை 17.15.

3. தவம்: உபவாசம் போன்ற விரதங்கள், தேவைகளைக் குறைத்தல், போன்ற பயிற்சிகள் ஆகியவைமூலம் புலன்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தப் பழகுதல்.

4. தமம்: புலக்கட்டுப்பாடு, புலன்கள் புறவுலகை அனுபவிப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. (பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ: - கட உபநிஷதம் 2.1.1) என்கிறது கட உபநிஷதம். புலன்களை அலையவிட்டு அவற்றின் பின்னால் செல்பவன் அழிகிறான் என்றும் அதே உபநிஷதம் எச்சரிக்கிறது. (பராச: காமானனுயந்தி பாலா; தே ம்ருத்யோர்யந்தி விததஸ்ய பாசம். கட உபநிஷதம் 2.1.2.)

5. சமம்: மனம் பரபரப்பின்றி அமைதியாக இருத்தல் படபடத்துக் கொண்டிருக்கும் மனத்தால் எந்த விஷயத்தையும் தெளிவாக ஆராயமுடியாது; சரியாக எதையும் நிறைவேற்ற முடியாது. எனவே மனத்தைச் சாந்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

6. வேள்விகள்: பிரபஞ்சத்திலிருந்து நாம் பெற்றதைத் திருப்பிக் கொடுக்கும் வண்ணம் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே வேள்வி என்று ஏற்கனவே (1:7) கண்டோம்.

திருப்பிக் கொடுப்பது எவ்வாறு?

ஐந்து வழிகளில் இதனைச் செய்யலாம் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த ஐந்து வழிகள் பஞ்ச மஹா யஜ்ஞங்கள், அதாவது, ஐந்து மாபெரும் வேள்விகள் என்று அழைக்கப்படுகின்றன.

1. தேவ யஜ்ஞம்: பூஜை முதலியவை, இறைவனிடமிருந்து பெற்றதை இதன்மூலம் அவருக்குத் திருப்பிக் கொடுக்கிறோம்.

2. ரிஷி யஜ்ஞம்: சாஸ்திரங்களைப் படித்தல், கற்பித்தல், நமது ரிஷிகளிடமிருந்து பெற்ற அறிவைத் சரியான வழியில் செலவிட்டு, அதன்மூலம் திருப்பிக் கொடுக்கிறோம்.

3. பித்ரு யஜ்ஞம்:

பெற்றோருக்கான கடமைகளைச் செய்தல்; முன்னோர் பெருமையை நிலைநாட்டும் வண்ணம் வாழல். பெற்றோரிடமிருந்தும் முன்னோரிடமிருந்தும் பெற்றவற்றை இதன்மூலம் திருப்பிக் கொடுக்கிறோம்.

4. நர யஜ்ஞம்: பிற மனிதர்களுக்கு உதவுதல், சமுதாயத் திடமிருந்து நாம் பெற்றதை இதன்மூலம் திருப்பிக் கொடுக்கிறோம்.

5. பூத யஜ்ஞம்: பிற உயிரினங்களுக்கு உதவுதல், இயற்கையிலிருந்து நாம் பெற்றதை இதன்மூலம் திருப்பிக் கொடுக்கிறோம்.

இந்த ஐந்து வேள்விகளின் மூலம் நாம் பிற உயிர்களுடன், பிற மனிதர்களுடன், பெற்றோருடன், பெரியவர்களுடன், இயற்கை சக்திகளுடன் இயைந்து வாழ்கிறோம்.

7. அக்னி ஹோத்ரம்: இல்லறத்தானின் தினசரிக் கடமைகளுள் ஒன்று இது. வீட்டில் அக்கினியை நிறுவி, உரிய மந்திரங்களுடன் உரிய பொருட்களைச் சமர்ப்பித்து தேவர்களையும் இறந்த முன்னோர்களையும் வழிபடுவதே அக்னி ஹோத்ரம்.

இன்றைய சமுதாய சூழ்நிலையில் இத்தகைய அக்கினி காரியங்களைச் செய்வது எல்லோராலும் இயலக்கூடியது அல்ல. எனவே தினசரி இறைவனை வழிபடுவது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

8. விருந்தினரைப் பேணுதல்: விருந்தினர் தெய்வமே என்று இந்த உபநிஷதம் பின்னால் (1:11.2) கூறுகிறது. ஒரு காலத்தில் இந்தப் பண்பு இந்தியாவில் மிகவும் போற்றப்பட்டது என்றும் தற்போது வேகமாக மறைந்து வருகிறது. என்றும் சுவாமி விவேகானந்தர் வருந்துகிறார்.

9. மனிதகுல நன்மை: தனக்கு நன்மை தரவல்ல செயல்களையே மனிதன் செய்வான். ஆனால் நான் என்ற எல்லையைக் கடந்து இன்னும் சிலருக்காவது நன்மை பயக்கின்ற செயல்களைச் செய்ய அவன் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய பயிற்சியும் மாணவப் பருவத்தில் அந்த நாட்களில் கொடுக்கப்பட்டது.

10-12 நல்ல சந்ததியை உருவாக்குதல்: ஓர் இல்லறத்தானின் தலையாய கடமை இது. இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதற்கே போல் இந்தக் கருத்து மூன்று கோணங்களில் சொல்லப்படுகிறது- நல்ல மக்கள், நல்ல பேரப் பிள்ளைகள், நல்ல சந்ததி என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. நல்ல சந்ததியை உருவாக்க வேண்டும். என்றால் தான் நல்லவனாக, நல்லொழுக்கம் நிறைந்தவனாக, நல்வழியில் செல்பவனாக இருக்க வேண்டும். எனவே நல்வழியின் முக்கியத்துவம் இங்கே கூறப்படுகிறது.

இவ்வாறு சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக உருவாவதற்கான அடிப்படைப் பண்புகள் மாணவப் பருவத்திலேயே புகட்டப்பட்டன; வளர்க்கப்பட்டன.

10 சுயத் தூண்டுதல்:

வாழ்க்கைக் கல்வியின் அடுத்த அம்சம் சுயத் தூண்டுதல், ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு முன்னேறும்போது, சிலவேளைகளில் லட்சியம் மறந்துபோவதுண்டு; சிலவேளைகளில், லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுயத் தூண்டுதல் (ச்தtணி ண்தஞ்ஞ்ஞுண்tடிணிண) எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. உபநிஷதங்களைப் படிக்கும்போது மட்டுமல்லாமல், இவற்றை பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும். இத்தகைய மந்திரங்கள் நம்மை நமது சுய கவுரவத்தில் (ண்ஞுடூஞூ - ஞீடிஞ்ணடிtதூ) நிலைபெறச் செய்கின்றன. அத்தகையதொரு மந்திரம் இது.

அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா கீர்த்தி: ப்ருஷ்ட்டம் கிரேரிவ
ஊர்த்வ பவித்ரோ வாஜினீவ ஸ்வம்ருதமஸ்மி த்ரவிணக்ம்
ஸவர்ச்சஸம் ஸுமேதா அம்ருதோக்ஷித: இதி த்ரிசங்கோர்
வேதானுவசனம்        //10//

அஹம் - நான்; வ்ருக்ஷஸ்ய - வாழ்க்கையாகிய மரத்தின்; ரேரிவா - வளம் செய்பவன்; கீர்த்தி: - புகழ்; கிரே: -மலையின்; ப்ருஷ்ட்டம் - சிகரம்; இவ- போல்; ஊர்த்வ - பவித்ர; - பெருமையும் புனிதமும்; வாஜினி இவ - சூரியனைப்போல்; ஸு அம்ருதம் - அழிவற்றவனாக; அஸ்மி - இருக்கிறேன்; த்ரவிணம் - செல்வம்; ஸ வர்ச்சஸம் - ஒளி மிக்கவன்; ஸுமேதா: உணர்வு விழிக்கப் பெற்றவன்; அம்ருத: - அழிவற்றவன்; அக்ஷித: - குறையற்றவன்; இதி - இவ்வாறு; த்ரிசங்கோ: - திரிசங்கு முனிவரின்: வேத அனுவசனம் - அனுபவ வார்த்தைகள்.

10. வாழ்க்கையாகிய மரத்தை வளம் செய்பவன்
நான். மலையின் சிகரம்போல் எனது புகழ் பெருமையும்
புனிதமும் வாய்ந்தது. சூரியனைப்போல் நான் அழி
வற்றவனாக இருக்கிறேன். ஆன்மீகச் செல்வத்தின் இருப்
பிடம் நான். நான் ஒளி மிக்கவன்; உணர்வு விழிக்கப்
பெற்றவன்; அழிவற்றவன்; குறையற்றவன் -  இது
திரிசங்கு முனிவரின் அனுபவ வார்த்தைகள்.

திரிசங்கு என்ற முனிவர் தாம் அனுபூதியில் உணர்ந்ததை இங்கே கூறுகிறார். அனுபூதி பெற்ற முனிவர்கள் அனுபவித்ததை நாம் சாதனையாக, பயிற்சியாக செய்ய வேண்டும்.

(ஸர்வத்ரைவ ஹி அத்யாத்ம சாஸ்த்ரே க்ருதார்த்த லக்ஷணானி யானி தான்யேவ ஸாதனானி உபதிச்யந்தே, யத்ன ஸாத்யத்வாத் - பகவத்கீதை, 2.55 முன்னுரையில்) என்கிறார். ஸ்ரீசங்கரர். எனவே இந்தப் பகுதியை ஒரு மந்திரம்போல் மீண்டும் மீண்டும் சொல்லி, சிந்தித்து மனத்தில் பதிக்க வேண்டும்.

11 கடமைகள்:
(11.1-11.8)

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியர் அளிக்கும் செய்திபோல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுலவாசம் முடிந்த பின் மாணவர்கள் வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டிய முக்கியமான 15 கடமைகள் இதில் கூறப்படுகின்றன.

வேதமனூச்யாசார்யோ ஸந்தேவாஸினமனுசாஸ்தி ஸத்யம்
வத தர்மம் சர ஸ்வாத்யாயான்மா ப்ரமத: ஆசார்யாய ப்ரியம்
தனமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸீ: //11.1//

வேதம் - வேதங்களை: அனூச்ய - கற்பித்த பிறகு; ஆசார்ய: - ஆசாரியர்; அந்தேவாஸின; - மாணவர்களுக்கு; அனுசாஸ்தி - போதிக்கிறார்; ஸத்யம் - உண்மை; வத - பேசுங்கள்; தர்மம் - தர்ம வழியில்; சர - செல்லுங்கள்; ஸ்வாத்யாயாத் - கல்வியை; மா ப்ரமத: - விடாதீர்கள்; ஆசார்யாய - ஆச்சாரியருக்கு; ப்ரியம் - விருப்பமான; தனம் - செல்வத்தை; ஆஹ்ருத்ய - கொடுத்து; ப்ரஜா தந்தும் - சந்ததிச் சங்கிலியை; மா வ்யவச்சேத்ஸீ: - வெட்டாதீர்கள்;

11.1 வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியர் மாணவர்களுக்குச் சில அறநெறிகளைப் போதித்கிறார்:

உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். சந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள்.

ஸத்யான்ன ப்ரமதிதவ்யம் தர்மான்ன ப்ரமதிதவ்யம்
குசலான்ன ப்ரமதிதவ்யம் பூத்யை ந ப்ரமதிதவ்யம் ஸ்வாத்யாய
ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம் தேவபித்ரு கார்யாப்யாம்

ந ப்ரமதிதவ்யம் //11.2//

ஸத்யாத் - உண்மையிலிருந்து தர்மாத் - தர்மத்திலிருந்து; குசலாத் - நன்மை தருபவற்றிலிருந்து; பூத்யை- நற்செயல்களிலிருந்து; ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் - கற்பதிலிருந்தும் கற்றுக்கொடுப்பதிலிருந்தும்; தேவ பித்ரு கார்யாப்யாம்- தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து; ந ப்ரமதிதவ்யம் - விலகாதீர்கள்.

11.2 உண்மையிலிருந்து விலகாதீர்கள். தர்மத்
திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றி
லிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிலிருந்து
விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக்கொடுப்ப
திலிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும்
முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமை
களிலிருந்து விலகாதீர்கள்.

தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் என்பதை 1:9 விளக்கவுரையில் தேவ யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம் என்ற தலைப்பில் கண்டோம்.

மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆசார்ய தேவோ
பவ அதிதி தேவோ பவ //11.3//

மாத்ரு - தாய்: பித்ரு - தந்தை; ஆசார்ய: - ஆசிரியர்: அதிதி - விருந்தினர்; தேவ: - தெய்வம்; பவ - ஆகட்டும்.

11.3 தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள்
தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள்
ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள்
விருந்தினரைக் தெய்வமாகப் போற்றுங்கள்.

யான்யனவத்யானி கர்மாணி தானி ஸேவிதவ்யானி நோ
இதராணி யான்யஸ்மாகக்ம் ஸுசரிதானி தானி த்வயோபா-
ஸ்யானி நோ இதராணி //11.4//

யானி - எவை; அனவத்யானி - தீமை விளைவிக்காத; கர்மாணி - செயல்களோ; தானி - அவற்றை; ஸேவிதவ்யானி -  செய்ய வேண்டும்; ந உ இதராணி - மற்றவை அல்ல; யானி - எவை; அஸ்மாகம் - நமக்கு; ஸுசரிதானி - நற்பண்புகளை வளர்க்கின்ற; தானி - அவை; த்வயா - உங்களால் உபாஸ்யானி - பின்பற்றப்பட வேண்டும். ந உ இதராணி - மற்றவை அல்ல.

11.4 தீமை விளைவிக்காத செயல்களையே
நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக்
கூடாது. நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்
களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச்
செய்யக்கூடாது.

யே கே சாஸ்மச்ச்ரேயாக்ம்ஸோ ப்ராஹ்மணா: தேஷாம்
த்வயாஸஸஸனேன ப்ரச்வஸிதவ்யம்  //11.5//

யே கே ச - யார்; அஸ்மத் - நம்மைவிட; ச்ரோயாம்ஸ: - உயர்ந்தவர்களோ; ப்ராஹ்மணா: - தூயவர்களோ; தேஷாம் - அவர்களுக்கு; த்வயா - உங்களால்; ஆஸனேன - இருக்கை; ப்ரச்வஸிதவ்யம் - களைப்பைப் போக்க வேண்டும்.

11.5. நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ
வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை
அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க
வேண்டும்.

ச்ரத்தயா தேயம் அச்ரத்தயாஸதேயம் ச்ரியா தேயம்
ஹ்ரியா தேயம் பியா தேயம் ஸம்விதா தேயம் //11.6//

ச்ரத்தயா - நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன்; தேயம் - கொடுக்கப்பட வேண்டும்; அச்ரத்தயா - ஏனோதானோ என்று; அதேயம் - கொடுக்கக் கூடாது; ச்ரியா -  வருமானத்திற்கு ஏற்ப: ஹ்ரியா - பணிவுடன்; பியா - மரியாதையுடன்; ஸம்விதா - தகுந்த அறிவுடன்.

11.6 நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம்
செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம்
செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம்
செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும்
தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

தானம் பற்றிய சிறந்ததொரு விளக்கத்தை இங்கு நாம் காண்கிறோம். இந்த மந்திரம் கூறுகின்ற 4 அடிப்படை நியதிகளுடன் ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும்போது மட்டுமே அது தானம் ஆகிறது.

1. ஏனோதானோ என்று கொடுக்கக் கூடாது. ஈடுபாட்டுடன் கொடுக்க வேண்டும். அந்த ஈடுபாட்டின் பின்னணியில் இது உண்மையிலேயே மகோன்னதமான சேவை. உண்மையிலேயே நற்பணியில் ஈடுபடுபவனுக்கு மனிதன், மனிதன் ஏன், இறைவனே உதவுவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும்.

2. வருமானத்தில் இயன்ற அளவு ஒரு பகுதியைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அதேவேளையில், வருமானத்தை மீறி தானம் செய்துவிட்டு தான் பிறரிடம் யாசிக்கும் நிலையை உண்டாக்கக் கூடாது.

3. ஐந்து காசுகளைக் கையில், எடுத்துக்கொண்டு, உயரமான மேடையில் நின்றுகொண்டு, பிச்சைக்காரா, இதோ என்று கூறாதீர்கள். அவன் இருந்ததால்தானே அவனுக்குத் தானம் செய்து, அதன்மூலம் உங்களுக்கு நீங்களே உதவ முடிந்தது என்று அவனிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக் கொள்பவனல்ல, கொடுப்பவனே பேறு பெற்றவன். உங்கள் தானத்திறத்தையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் நீங்கள் தூய்மையும் நிறைநிலையும் அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள்.

4. தானம் செய்யும்போது இரண்டு விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். நம்மை எதிர்பார்த்துச் சிலர் வாழ்கிறார்கள், நாம் ஒருவருக்கு நன்மை செய்ய முடியும் என்று எண்ணுவது பலவீனம். இதுவே நம்முடைய பற்றுக்கள் அனைத்திற்கும் பிறப்பிடம். இந்தப் பற்றின்மூலமே நமது துன்பங்கள் எல்லாம் வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர்கூட நம்மை எதிர்பார்த்து வாழவில்லை என்பதை மனத்திற்கு எடுத்துக்கூற வேண்டும். ஒரு பிச்சைக்காரன் கூட நம் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. நம் உதவியை எதிர்பார்த்து ஓர் உயிர்கூட வாழவில்லை. அனைவருக்கும் இயற்கையே உதவி செய்கிறது. நம்மைப்போல் லட்சக்கணக்கான மனிதர்கள் இல்லாவிட்டாலும் இயற்கை உதவிக்கொண்டுதான் இருக்கும். உங்களுக்காகவும் எனக்காகவும் இயற்கையின் போக்கு நிற்காது. பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகின்ற மிகப் பெரும் பேறு என்பது ஒன்று.

இரண்டாவது: பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்கள். நாம் ஒன்றை ஒருவருக்குக் கொடுக்குமுன் அது அவருக்குத் தேவையிருக்கிறதா, அந்த தானத்தால் அவர் பயன்பெறுவாரா என்பவற்றை அறிந்த பின்னரே ஒன்றைக் கொடுக்க வேண்டும்.

அத யதி தே கர்மவிசிகித்ஸா வா வ்ருத்த விசிகித்ஸா வா
ஸ்யாத் யே தத்ர ப்ராஹ்மணா: ஸம்மர்சின: யுக்தா ஆயுக்தா:
அலூக்ஷா தர்மகாமாஸ்ஸ்யு; யதா தே தத்ர வர்த்தேரன் ததா
தத்ர வர்த்தேதா:

அதாப்யாக்யாதேஷு யே தத்ர ப்ராஹ்மணா: ஸம்மர்சின;
யுக்தா ஆயுக்தா: அலூக்ஷா தர்ம காமாஸ்ஸ்யு: யதா தே தேஷு
வர்த்தேரன் ததா தேஷு வர்த்தேதா:         //11.7//

அத - இப்போது: தே - உனக்கு; கர்ம விசிகித்ஸா யதி - கடமைபற்றி சந்தேகம் இருக்குமானால்; வா - அல்லது; வ்ருத்த விசிகித்ஸா - நடந்துகொள்ள வேண்டிய முறை; வா - ஸ்யாத் - இருக்குமானால்; தத்ர - அங்கே; ஸம்மர்சின;- சிந்திப்பவர்கள்; யுக்தா: - மனஒருமைப்பாடு உடையவர்கள்: ஆயுக்தா: - சுதந்திரமானவர்கள்; அலூக்ஷா: - கோணல் புத்தி இல்லாதவர்கள் தர்மகாமா: - நல்வழியில் நடப்பவர்கள்; யே ப்ராஹ்மணா: - சன்றோர்கள்; ஸ்யு: - இருக்கிறார்களோ; தே - அவர்கள்; தத்ர - அந்த விஷயங்களில்; யதா - எப்படி: வர்த்தேரன் - நடந்துகொண்டார்களோ, ததா -  அப்படி; தத்ர - அந்த விஷயங்களில், வர்த்தேதா: - நடந்துகொள்ள வேண்டும்;

அப்யாக்யாதேஷு - குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு; தேஷு - அந்த விஷயங்களில்.

11.7 உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட
சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பவைபற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுமானால்
சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து
சிந்திக்கின்ற, மனஒருமைப்பாடு மிக்க, சுதந்திரமான,
கோணல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற
அந்தச் சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி
நடந்துகொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகும்போதும்
அதுபோலவே, சான்றோர்களைப் பின்பற்றுங்கள்.

சான்றோர்கள் என்றால் யார், வாழ்க்கையில் நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஓர் அற்புதமான விளக்கத்தை இங்கே நாம் காண்கிறோம். எடுத்தேன், முடித்தேன் என்று எதையும் செய்யாமல் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுபவர்கள். சிறிய வேலையானாலும் பெரிய வேலையானாலும் பதற்றத்துடனோ ஏனோதானோ என்றோ அல்லாமல் செயலாற்றுபவர்கள். எந்தத் தீமைகளுக்கும் ஆசைகளுக்கும் அடிபணியாமல் சுதந்திரமாக வேலை செய்பவர்கள். குறுக்கு வழிகளை நாடாமல் நேர்வழியில் செல்பவர்கள், கடைசியாக முக்கியமாக தூய வாழ்க்கையில் நிலை பெற்றவர்கள் - இவர்கள் சான்றோர்கள். இவர்களைப் பின்பற்ற வேண்டும்.

ஏஷ ஆதேச: ஏஷ உபதேச: ஏஷா வேதோபநிஷத்
ஏததனுசாஸனம் ஏவமுபாஸி தவ்யம் ஏவமுசைதது
பாஸ்யம் //11.8//

ஏஷ: - இது: ஆதேச: - கட்டளை: உபதேச: - அறிவுரை; வேத உபநிஷத் - வேத ரகசியம்; ஏதத் - இது: அனுசாஸனம் - இறையாணை; ஏவம் - இவ்வாறு; உபாஸிதவ்யம் - செய்ய வேண்டும்; ஏவம் உ - இவ்வாறே; ஏதத் - இதனை; உபாஸ்யம் ச - செய்ய வேண்டும்.

11.8 இதுவே கட்டளை, இதுவே அறிவுரை
இதுவே வேத ரகசியம். இதுவே இறையாணை
இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறே
செய்யப்பட வேண்டும்.

12. நன்றி கொள்க!

ஓம் சன்னோ மித்ரச்சம் வருண: சன்னோ பவத்வர்யமா
சன்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி: சன்னோ விஷ்ணுருருக்ரம:
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்மாஸி த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாவாதிஷம்
ரிதமவாதிஷம் ஸத்யமவாதிஷம் தன்மாமாவீத் தத்
வக்தாரமாவீத் ஆவீன்மாம் ஆவீத் வக்தாரம்: ஓம் சாந்தி:
சாந்தி: சாந்தி: //12//

12. மித்ரன் நமக்கு நன்மை செய்வாராக. வருணன்
நமக்கு நன்மை செய்வாராக, அர்யமான் நமக்கு
நன்மை செய்வாராக. இந்திரனும் பிருகஸ்பதியும்
நமக்கு நன்மை செய்வார்களாக, எங்கும் நிறைந்தவ
ராகிய விஷ்ணு நமக்கு நன்மை செய்வாராக.
பிரம்மனை வணங்குகிறேன். வாயுதேவனே,
உன்னை வணங்குகிறேன், நீயே கண்கண்ட தெய்வ
மாக இருக்கிறாய். கண்கண்ட தெய்வம் என்று
உன்னைப் போற்றினேன்; ரிதம் என்று போற்றினேன்;
சத்தியம் என்று கூறினேன். அந்தப் பரம்பொருள்
என்னைக் காத்தார்! அவர் ஆசிரியரைக் காத்தார்!
என்னைக் காத்தார்! ஆசிரியரைக் காத்தார்!

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: //12//

இந்த மந்திரம் முதல் மந்திரம் (1:1) போன்றது. ஆனால் அங்கே போற்றுகிறேன் ( விதிஷ்யாமி), காப்பாராக (அவது) என்று இருந்தது. இங்கே போற்றினேன் (அவாதிஷம்) காத்தார் (ஆவீத்) என்று உள்ளது. ஆரம்ப மந்திரத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. இங்கே அந்தப் பிரார்த்தனை நிறைவேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பிரார்த்தனைகள் செய்யும்போது அவை நிறைவேறும் என்ற நம்பிக்கை வேண்டும். அவற்றை நிறைவேற்றுகின்ற இறைவனிடம் நன்றி பாராட்ட வேண்டும். வாழ்க்கையில் நமக்குக் கிடைக்காதவற்றை எண்ணி மனம் வருந்துகிறோமே. தவிர, கிடைத்தவற்றை எண்ணி அவற்றைத் தந்த இறைவனைப் பொதுவாக நாம் போற்றுவதில்லை. இறைவனிடம் அத்தகைய நன்றியுணர்வுடன் வாழுமாறு இந்த மந்திரம் போதிக்கிறது.

இதி தைத்திரீயோபநிஷதி சீக்ஷாவல்லி ஸமாப்தா

தைத்திரீய உபநிஷதத்தில் சீக்ஷாவல்லீ நிறைவுறுகிறது.

 
மேலும் தைத்திரீய உபநிஷதம் »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
சீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி ... மேலும்
 
temple news
பிராணாயாமத்தால்தான். பிராணாயாமத்தால், உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது ... மேலும்
 
temple news

மனிதன் ஜூலை 20,2015

(ஆனந்த வல்லி)வாழ்க்கையைத் தன் போக்கில் போக விடாமல், உணர்ந்து, அனுபவித்து வாழுமாறு இந்த உபநிஷதம் ... மேலும்
 
temple news
மஹத் என்றால் என்ன?நமது ஐந்து உடம்புகளைப்பற்றி இந்த மந்திரங்கள் கூறி வருகின்றன. ஒவ்வோர் உடம்பும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar