Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » மாயையும் கோகுலமும்
மாயையும் கோகுலமும்!
எழுத்தின் அளவு:
மாயையும் கோகுலமும்!

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
17:50

1. பவந்தம் அயம் உத்வஹந் யதுகுல உத்வஹ: நிஸ்ஸரன்
ததர்ச ககநோச்சலஜ்ஜல பராம் கலிந்தாத்மஜாம்
அஹோ ஸலில ஸஞ்சய: ஸ புநரைந்த்ர ஜாலோதிதோ
ஜலௌக இவ தத்க்ஷணாத் ப்ரபதமேயதா மாயயௌ

பொருள்: குருவாயூரப்பனே! யது குலத்தில் உத்தமராக விளங்கிய வஸுதேவர் உன்னைத் தூக்கிக் கொண்டு வரும் வழியில், வானம் வரை உயரமாக எழுப்பும் அலைகளை உடைய யமுனை நதியைக் கண்டார். ஆயினும் அவர் அந்த நதியின் அருகில் சென்றதும் இந்திரஜாலம் போன்று, வெள்ள நீர் வடிந்து, அவர் கணுக்கால் அளவே வந்தது அல்லாவா? என்ன வியப்பு.

2. ப்ரஸுப்த பசுபாலிகாம் நிப்ருத மாருதத்பாலிகாம்
ஆபாவ்ருத கவாடிகாம் பசுபவாடிகாம் ஆவிசந்
பவந்தமய மர்ப்பயந் ப்ரஸவதல்பகே தத்பதாத்
வஹந் கபட கந்யகாம் ஸ்வபுரமாகதோ வேகத:

பொருள்: குருவாயூரப்பனே! வஸுதேவர் கோகுலத்திற்குச் சென்றபோது (உனது மாயை மூலம்) அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். நந்தகோபர் வீட்டில் இருந்த மாயையான பெண் குழந்தை மெதுவாக அழுதது (வஸுதேவருக்கு வீட்டைக் காண்பிப்பது போல்). அந்த வீட்டின் கதவுகள் திறந்திருந்தன. நந்தகோபரின் வீட்டினுள் வஸுதேவர் சென்றார். யசோதையின் ப்ரஸவப் படுக்கையில் உன்னை வைத்தார். அந்தப் படுக்கையில் இருந்த மாயக் குழந்தையை எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்கு விரைவாக வந்தார்.

3. ததஸ்த்வ தநுஜாரவ க்ஷபித நித்ரவேக த்ரவத்
படோத்கர நிவேதித ப்ரஸவ வார்த்தயைவ ஆர்த்திமாந்
விமுக்த சிகுரோத்கர ஸ்த்வரித மாபதந் போஜராட்
அதுஷ்ட இவ த்ருஷ்டவாந் பகிநிகாரே கன்யகாம்

பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய சகோதரியான அந்தப் பெண் அழுவதைக் கேட்டு காவலர்கள் கண் விழித்தனர். குழந்தை பிறந்த விவரத்தைக் கம்சனிடம் சென்று கூறினர். இதனைக் கேட்ட கம்சன் மிகுந்த மன வருத்தம் கொண்டு, விரித்த தலையுடன் விரைவாக சிறைக்கு வந்தான். அந்தக் கொடியவன் தனது தங்கையிடம் ஒரு பெண் குழந்தை இருந்ததைக் கண்டு மனம் கலங்கி நின்றான்.

4. த்ருவம் கபடசாலிநோ மதுஹரஸ்ய மாயா பவேத்
அஸாவிதி கிசோரிகாம் பகிநிகா கராலிங்கிதாம்
த்விபோ நலிநி காந்தராதிவ ம்ருணாலிகாமாக்ஷிபந்
அயம் த்வத் அநுஜாமஜாம் உபல பட்டகே பிஷ்டவாந்

பொருள்: குருவாயூரப்பா! அந்தக் குழந்தையைக் கண்ட கம்சன், இந்தக் குழந்தை மது என்ற அரக்கனை அழித்த ஹரியின் மாயையாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தான். அந்தக் குழந்தையை, யானை ஒன்று குளத்தில் இருந்து தாமரை ஒன்றை வெகு அலட்சியமாகப் பறிப்பது போன்று, தேவகியிடம் இருந்து இழுத்தான். உன் தங்கையான, பிறப்பற்ற அந்தக் குழந்தையை மிகவும் வேகமாக அங்கு இருந்த பாறையில் அடித்தான்.

5. ததோ பவத் உபாஸகோ ஜடிதி ம்ருத்யுபாசாதிவ
ப்ரமூச்ய தரஸைவ ஸா ஸமதிரூட ரூபாந்தரா
அதஸ்தலம் அஜக்முஷீ விகஸந் அஷ்ட பாஹுஸ்புரந்
மஹாயுதமஹோ கதா கில விஹாயஸா வித்யுதே

பொருள்: குருவாயூரப்பா! உன்னையே துதிப்பவர்கள், உனது அடியார்கள் யமனின் பாசக்கயிற்றில் இருந்து எப்படி விடுபடுவார்கள் - அதுபோல் அந்த மாயை (பெண் குழந்தை) கம்ஸனின் கைகளில் இருந்து விடுபட்டு, மேலே ஏறினாள். வேறு உருவம் அடைந்து, எட்டுக் கைகளுடன் ஆயுதம் ஏந்தியவளாகத் தோன்றினாள்.

6. ந்ருசம்ஸதர கம்ஸ தே கிமு மயா விநிஷ்பிஷ்டயா
பபூவ பவ தந்கக: க்வசந சிந்த்யாம் தே ஹிதம்
இதி த்வத் அநுஜா விபோ கலம் உதீர்ய தம் ஜக்முஷீ
ம்ருத்கண பணாயிதா புவி ச மந்திராண்யே யுஷீ

பொருள்: குருவாயூரப்பனே! அந்த மாயை கம்ஸனிடம், கொடியவனே! கம்ஸா! என்னை இப்படி அடித்துக் கொல்வதால் என்ன பயன்? உன்னைக் கொல்ல ஒருவன் வேறு இடத்தில் பிறந்துள்ளான். உனது நன்மையை இப்போதாவது தேடிக்கொள் என்றாள். பின்னர் அவள் தேவகணங்களால் துதிக்கப்பட்டவளாக, பூமியில் பல கோயில்களில் நின்றாள்.

7. ப்ரகே புந ரகாத்மஜா வசந மீரிதா பூபுஜா
ப்ரலம்ப பக பூதநா ப்ரமுக தாநவா மாநிந:
பவந்திதந காம்யயா ஜகதி பப்ரமுர் நிர்ப்பயா:
குமாரக விமாரக: கிமிவ துஷ்கரம் நிஷ்க்ருபை:

பொருள்: குருவாயூரப்பனே! மறுநாள் காலையில் யோகமாயை கூறியதைக் கம்ஸன் மற்றவர்களுக்குக் கூறினான். இதனைக் கேட்ட கர்வம் உடைய ப்ரலம்பன், பகன் மற்றும் பூதனை போன்ற அசுரர்கள் உன்னைக் கொல்வதற்காக, அந்த நாட்டில் இருந்த பல குழந்தைகளைக் கொன்று, பயம் இல்லாமல் திரிந்தனர். இரக்கம் என்பதே அறியாதவர்கள் என்ன கெடுதல்தான் செய்ய மாட்டார்?

8. தத: பசுப மந்திரே த்வயி முகுந்த நந்தப்ரியா
ப்ரஸுதி சயனே சயே ருததி கிஞ்சிதஞ்சத் பதே
விபித்ய வநிதா ஜனைஸ்தநய ஸம்பவே கோஷிதே
முதா கிமு வதாம்யஹோ ஸகலமாகுலம் கோகுலம்

பொருள்: குருவாயூரப்பா! முகுந்தா! நந்தகோபரின் வீட்டில், அவரது மனைவியான யசோதையின் ப்ரஸவப் படுக்கையில் படுத்திருந்த நீ உனது கால்களை சிறிது அசைத்து அழுதாய். இதனைக் கேட்டு யசோதை மற்றும் அங்குள்ள கோபிகைகள் கண் விழித்தனர் உன்னைக் கண்டதும் பிறந்த குழந்தையைப் பற்றிய செய்தியை ஊர் முழுவதும் உற்சாகமாகக் கூறித் திரிந்தனர். இதனைக் கேட்ட அந்தக் கோகுலம் முழுவதுமே ஆனந்தத்தில் திளைத்ததாமே! இதனை நான் எப்படி வர்ணிப்பது?

9. அஹோ கலு யசோதயா நவகலாய சேதாஹரம்
பவந்தமலமந்திகே ப்ரதமம் ஆபிபந்த்யாத்ருசா
புந: ஸ்தனபரம் நிஜம் ஸபதி பாயயந்த்யா முதா
மநோஹர தநுஸ்ப்ருசா ஜகதி புண்யவந்தோ ஜிதா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! புதிதாக மலர்ந்துள்ள காயாம்பூ போன்று நீ படுக்கையில் கிடந்தாய். மனதைக் கவர்கின்ற உனது திருமேனியை நெருங்கிய யசோதை கண்களால் உன்னைப் பருகினாள். தனது ஸ்தனங்களில் உனக்கு பால் ஊட்டினாள். உன்னுடைய அழகான மேனியை மெதுவாகத் தொட்டாள். இந்த உலகத்தில் இவள் செய்த புண்ணியத்தை யாரும் அடையவில்லை. அனைவரையும் விட புண்ணியத்தில் வெற்றி பெற்றாள்.

10. பவத்குசல காம்யயா ஸ கலு நந்தகோபஸ்ததா
ப்ரமோத பரஸங்குலோ த்விஜ குலாய கிம் ந அததாத்
ததைவ பசுபாலகா: கிமு ந மங்கலம் தேநிரே
ஜகத் த்ரிதய மங்கள த்வம் இஹ பாஹி மாம் ஆமயாத்

பொருள்: குருவாயூரப்பா! மிகுந்த ஆனந்தம் கொண்ட நந்தகோபர், உனது நலனுக்காக, ப்ராமணர்களுக்குப் பல தானங்கள் அளித்தார். அங்கு இருந்த யாதவர்கள் பலரும் அப்படியே மங்களமான செயல்களைச் செய்தனர். மூன்று உலகங்களுக்கும் மங்களங்கள் அளிப்பவனே! என்னுடைய பிணிகளைப் போக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar