Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண் திறந்தது மயில் பறந்தது! எளிமையாகவே வாழ்வோமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை மழை பொழியட்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
12:07

அரக்கர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் இருப்பிடம் எது என்றெல்லாம் தேட வேண்டாம். இரக்கம் இல்லாத நெஞ்சினர் அரக்கர் என்கிறார் கம்பர்.  இங்கு என்பதற்கு எதிர்ப்பதம் அங்கு என்பது போல, இரக்கம் என்பதற்கு எதிர்ப்பதம் அரக்கம். ஒருமுறை மன்னர் விக்ரமாதித்தர், காட்டுப் பகுதியில் குதிரையில் சென்று கொண்டிருந்தார். சற்று துõரத்தில் பசு ஒன்று பெரும் சேற்றில் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதை.... வெளியே கொண்டு வர, மன்னர் கடுமையாக முயற்சித்தார். முயற்சி வீணானது. பொழுது சாயும் நேரம்.... மன்னர் திகைத்த வேளையில்.... உறுமல் சத்தம் கேட்டது. பசுவை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்த நேரத்தில், மன்னர் திரும்பிப் பார்த்தார். அங்கே..... ஒரு சிங்கம் பசுவின் மீது பாயத் தயாராக இருந்தது. அதைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம்மன்னருக்கு உண்டானது. வாளை உருவிக் கொண்டு, சிங்கத்தை எதிர்கொள்ளத் தீர்மானித்தார். அவ்வப்போது சிங்கம் பசுவை நோக்கிப் பாய்வதும், அதை மன்னர் தடுப்பதுமாக இரவுப்பொழுது போய்க் கொண்டிருந்தது. அப்போது..... அங்கிருந்த மரத்தில் இருந்த ஒரு கிளி விக்ரமாதித்தரிடம், மன்னா! ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? சேற்றில் அகப்பட்ட பசு, எப்படியும் இறக்கத் தான் போகிறது. நீ களைத்து இருக்கும் போது, சிங்கம் உன் மீது பாய்ந்து உன்னைக் கொன்று விட்டால், என்ன செய்வாய்? ஆகையால், பசுவைக் காப்பாற்றுவதை விடு! நீ பாதுகாப்பாக இரு! உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்! என்றது. மன்னர் மறுத்தார்.  கிளியே! நீ எனக்கு அதர்மமான வழியைக் காட்டாதே. எல்லா ஜீவராசிகளும் தான், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றன. ஆனால், அடுத்தவரைக் காப்பதற்காக, எவனொருவன் தன் உயிரைக் கொடுக்கிறானோ அவனே புண்ணியத்தை சம்பாதிக்கிறான். தலைவன் இல்லாத படை, எப்படி பயனில்லாமல் போகுமோ, அது போல இரக்கம் இல்லாத புண்ணிய செயலும் வீண் தான் என்றார்.  அதே விநாடியில்.... பொழுது விடிந்தது. பசு, சிங்கம், கிளி மூன்றையும் காணோம். அங்கே இந்திரன், தர்ம தேவதை, பூமாதேவி ஆகியோர் இருந்தார்கள்.  விக்ரமாதித்தா! உன் இரக்கம் கண்டு மகிழ்ந்தோம், என்று வாழ்த்தி, காமதேனுப் பசுவை பரிசாக அளித்து மறைந்தார்கள்.  இரக்கமே இன்பத்திற்கான திறவுகோல்.....! 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* ஆடை, தலைமுடி, பற்களை துாய்மையாக வைத்திரு.  * விலா எலும்பு போல மென்மையானவள் பெண். அவளுக்கு ... மேலும்
 

அக்கறையுடன்... ஏப்ரல் 13,2026

மதினா நகரிலுள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதின் நபவியில் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் இறந்தார். ஒரு வாரம் ... மேலும்
 

அடையாளம் ஏப்ரல் 13,2026

* தர்மம் செய்யும் போது துன்பம் வருகிறதா... அது இறைவனின் கருணைக்கான அடையாளம்.  * பொறாமைப்படாதே. உனக்கு ... மேலும்
 
ஒரு மனிதனின் குணத்தை அறிய உதவுவது நாக்கு. அதன் வலிமையால் வாழ்ந்தவர்களும், வீழ்ந்தவர்களும் உண்டு. ... மேலும்
 

உண்மையை சொல் ஏப்ரல் 13,2026

விரக்தியில் இருந்தான் மாணவன் அப்துல். ஏனென்றால் கட்டுரைப்போட்டியில் அவனுக்கு கிடைத்தது ஆறுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar