Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » கோபியர்களின் மகிழ்ச்சி
கோபியர்களின் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2015
16:30

1. வ்ரஜ ஈச்வர: சௌரிவச: நிசம்ய
ஸமாவ்ரஜந் அத்வநி பீத சேதா:
நிஷ்பிஷ்ட நிச்சேஷ தரும் நிரீக்ஷ்ய
கஞ்சித் பதார்த்தம் சரணம் கத: த்வாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வசுதேவர் தனக்குக் கூறியதைக் கேட்ட நந்தகோபர் வீடு திரும்பினார். வரும் வழி முழுவதும் அவர் மனம் கலக்கமுற்று இருந்தது. தனது வீட்டருகில் அங்கு உள்ள  மரங்கள் அனைத்தையும் பொடியாக்கி ஓர் உருவம் விழுந்து கிடப்பதைக் கண்டு பயந்தார். உன்னைத் தனது மனதால் சரணம் அடைந்தார்.

2. நிசம்ய கோபீ வசநாந் உதந்தம் ஸர்வே
அபிகோபா: பய விஸ்மய அந்தா:
த்வத் பாதிதம் கோர பிசாச தேஹம் தேஹு:
விதூரே அத குடார க்ருத்தம்

பொருள்: குருவாயூரப்பா! நடந்த விவரங்களை கோபர்கள், ஆய்ச்சி பெண்கள் மூலம் அறிந்தனர். அவர்கள் அனைவரும் பயத்தாலும் வியப்பாலும், மரமாக நின்றனர். அதன் பின்னர் உன்னால் கொல்லப்பட்ட அந்த பயங்கரமான பிசாசின் உடலை, தங்கள் கோடரியால் துண்டு துண்டாக வெட்டினர். அவற்றை வெகுதூரம் கொண்டு சென்று எரித்தனர்.

3. த்வத் பீத பூத ஸ்தந தத் சரீராத் ஸமுச்சலந்
உச்சதர: ஹி தூம:
சங்காம் அதாந் ஆகரவ: கிமேஷ: கிம் சாந்தந:
கௌல் குலவ: அதவா இதி

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னால் ஸ்தனங்கள் பருகப்பட்டிருந்தாலும். உடலின்மீது அமர்ந்ததாலும் பூதனையின் உடல் பாவங்கள் நீங்கப் பெற்றதாக இருந்தது. அதனை எரித்தபோது மிகுந்த வாசனையுடன் புகை உயரமாகக் கிளம்பியது. இதனைக் கண்ட கோபர்கள் - இது அகிற்கட்டையில் தோன்றியதா, சந்தனக்கட்டையில் தோன்றியதா என்று சந்தேகம் கொண்டனர்.

4. மத் அங்க ஸங்கஸ்ய பலம் ந தூரே
க்ஷணேந தாவத் பவதாம் அபி ஸ்யாத்
இத்யுல்லபந் வல்லவ தல்லஜேப்ய:
த்வம் பூதாநாம் ஆதநுதா: ஸுகந்தீம்

பொருள்: குருவாயூரப்பா! எனது உடலுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு அதற்கான பலன் வெகு நாட்களுக்குப் பிறகு அல்ல. இந்தப் பிறவியில் உடனே கிடைக்கும் என்று கோபர்களுக்கு உணர்த்துவது போன்று நீ பூதனையின் உடலை மணம் வீசச் செய்தாய் அல்லவா?

5. சித்ரம் பிசாச்யா ந ஹத: குமார சித்ரம்
புரா ஏவ அகதி சௌரிணா இதம்
இதி ப்ரசம்ஸந் கில கோப லோக:
பவத் முக ஆலோக ரஸே ந்யமாங்க்ஷீத்

பொருள்: குருவாயூரப்பா! இத்தனை பெரிய பிசாசு மூலம் இந்தக் குழந்தை உயிர் பிழைத்தது அதிசயமே! இப்படி ஓர் ஆபத்து உண்டாகும் என்று வஸுதேவர் கூறியதும் வியப்பே! - இது போன்று கூறிய கோபர்கள், உனது அழகான திருமுகத்தைக் கண்டு மெய்ம் மறந்தனர்.

6. திநே திநே அத ப்ரதிவ்ருத்த லக்ஷ்மீ:
அக்ஷீண மாங்கல்ய சத வ்ரஜ: அயம்
பவத் நிவாஸாத் அயி வாஸுதேவ ப்ரமோத
ஸாந்த்ர: பரித: விரேஜே

பொருள்: குருவாயூரப்பா! வாஸுதேவா! நீ வசித்த காரணத்தால் கோகுலம் முழுவதும் தினம் தினம் லக்ஷ்மியின் கடாட்சம் பெருகியது. மங்காத மங்களம் எங்கும் நிறைந்தது. ஆனந்தம் எங்கும் குறைவற்று இருந்தது.

7. க்ருஹேஷு தே கோமல ரூப ஹாஸ மித:
கதா ஸங்குலிதா: கமந்ய:
வ்ருத்தேஷு க்ருத்யேஷு பவந் நிரீக்ஷா
ஸமாகதா: ப்ரத்யஹம் அத்யநந்தந்

பொருள்: குருவாயூரப்பா! ஆய்ச்சி பெண்கள் தங்கள் வீடுகளில் வேலை செய்து கொண்டிருக்கும்போதும் உனது அழகான உருவத்தையும், புன்சிரிப்பையும் பற்றியே பேசிக்கொண்டு மகிழ்வுற்றனர். அன்றாடம் தங்கள் வீட்டு வேலைகளை முடித்த பின்னர் உன்னைக் கண்டு இன்பமே அடைவார்களாமே!

8. அஹோ குமார: மயி தத்த த்ருஷ்டி:
ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேந
ஏஹி ஏஹி மாம் இதி உபஸார்ய பாணிம்
த்வயி ஈச கிம் கிம் ந க்ருதம் வதூபி:

பொருள்: குருவாயூரப்பா! ஈசனே! அந்தக் குழந்தை என்னைப் பார்த்து, என்னைக் கண்டு சிரித்தது - என்று கோபிகைகள் மகிழ்ந்தனர். உன்னை நோக்கி, என்னிடம் வா! என்னிடம் வா! என்று கைகளை நீட்டினர். உன்னைக் கொஞ்சும்போது அன்பான செயல்கள் எதைத்தான் அவர்கள் செய்யாமல் இருந்தனர்?

9. பவத் வபு: ஸ்பர்சந கௌதுகேன கதாத்கரம்
கோப வதூ ஜநேந
நீத: த்வம் ஆதாம்ர ஸரோஜ மாலா வ்யாலம்பி
லோலம்ப துலாம் அவாஸீ:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய அழகான உடலைத் தொடுவதிலும் மகிழ்வு கொண்ட கோபிகைகள், ஒருவருக்கொருவர் உன்னை மாற்றித் தூக்கிக் கொண்டனர். அப்போது நீ தாமரை மலர் மாலையில் ஒரு மலரை விட்டு மற்றொரு மலருக்கு தாவும் வண்டு போல் காணப்பட்டாய் அல்லவா?

10. நிபாயயந்தீ ஸ்தநம் அங்கம் த்வாம்
விலோகயந்தீ வதநம் ஹஸந்தீ
தசாம் யசோதா கதமாம் ந பேஜே ஸ: தாத்ருச:
பாஹி ஹரே கதாத் மாம்

பொருள்: குருவாயூரப்பனே! உன்னைத் தனது மடிமீது அமர்த்திக் கொண்டும், உனக்குப் பால் புகட்டிக் கொண்டும். உனது அழகான முகத்தைப் பார்த்துக் கொண்டும் யசோதை சிரித்தாள். அவள் அடைந்த ஆனந்த நிலைதான் என்னே? இப்படிப்பட்ட நீ எனது பிணிகளில் இருந்து காப்பாயாக!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar