பதிவு செய்த நாள்
25
ஜூலை
2015
12:07
தர்மபுரி: தர்மபுரி எஸ்.வி. ரோடு, ஆஞ்சநேயர் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நாளை (ஜூலை, 26) நடக்கிறது. தர்மபுரி, எஸ்.வி. ரோடு ஆஞ்சநேயர் கோவில், கும்பாபிஷேக விழா முடிவடைந்து, 48 நாட்களாக மண்டல பூஜை நடந்து வந்தது. இதன் நிறைவு விழாவாக, நாளை காலை, 9.30 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் சிறப்பு ஹோமம் மற்றும் ஸ்வாமிக்கு மஷா அபிஷேகம் நடக்கிறது. காலை, 11 மணிக்கு, ஸ்வாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மதியம், 12 மணிக்கு மாதவாச்சாரி ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பகாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.