Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெயமங்கள விநாயகர் கோவிலில் ... வெள்ளாத்துாரம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா! வெள்ளாத்துாரம்மன் கோவிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்: பக்தர்கள் நேர்த்திகடன்!
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்:  பக்தர்கள் நேர்த்திகடன்!

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2015
10:07

சிதம்பரம்: சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தையொட்டி ஆயிரக்கனக்கான பக்தர்கள் அலகு குத்தியும், அங்கப்பி ரதட்சணம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 10ம் நாள்  உற்சவமான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று தீமிதி உற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்காரம். சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு  குத்தியும், குழந்தைகளை தொட்டிலிட்டும், மாவிளக்கு போட்டும், பலர் பாலமன் கரையில் இருந்து செடல் காவடி, அந்தரத்தில் தொங்கு காவடி,  சூலம் காவடி சுமந்து  முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை அடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி  டி.எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 5 மணிக்கு அக்கினி சட்டி  புறப்பாடு செய்து தீக்குண்டம் ஏற்றப்பட்டது. பின்னர் பூங்கரகம் வீதி உலாக்காட்சி நடைபெற்று , மாலை 6.15 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  தீமிதித்து அம்மன் தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar