திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, ராதாகிருஷ்ணா வளாகத்தில், ராதா கல்யாணம் பஜனை நடைபெற்றது. முதல் நாள் காலை அஷ்டபதி ஆரம்பித்து, மாலை ராமர் கோவிலிருந்து ஸ்வாமி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் புறப்பட்டது. ராதாகிருஷ்ணன் ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, நாம சங்கீர்த்தனம் செய்தபடி, பகதர்கள் திருமண மண்டபம் வந்தடைந்தனர். இரவு திவ்ய நாம பஜனை, அபிநயநடனம் டோலோத்ஸவம். மறுநாள் காலை உஞ்சவிருத்தி, மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம், மதியம் ராதா கல்யாண திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. தெய்வீக வேடம் நிகழ்ச்சிக்கு பின் ஆஞ்சநேயர் உத்ஸவத்துடன் நிறைவுற்றது.ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி ஸ்ரீபாண்டுரங்க, பஜன் மண்டலி சார்பில் துளசிதாஸ் செய்தார்.