பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷம் கணக்கெடுப்புக்கும் தடை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2011 11:07
புதுடில்லி:திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்களை கணக்கெடுப்பது, வீடியோ எடுப்பது மற்றும் பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக தனது இடைக்காலத் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. அதிக அளவில் பொக்கிஷம் குறித்த தகவல்கள் மீடியாக்களில் வெளிவந்ததால், கணக்கெடுப்பு, மற்ற செயல்கள் ஆபத்தானது என்றும் கருத்து தெரிவித்தது. பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களை பாதுகாப்பது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தன. விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களை பாதுகாப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள் கூறுகையில், "பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷம் குறித்து மீடியாக்களில் பெரிய அளவில் செய்திகள் வெளிவருவது நல்லதல்ல. அது, அதன் எதிர்கால பாதுகாப்பு குறித்து கவலை தருகிறது. ஆகவே, கோவிலுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்த தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், மறு உத்தரவு வரும் வரை, கோவிலில் உள்ள ஆறாவது ரகசிய அறையை திறக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டனர்.