பதிவு செய்த நாள்
15
ஜூலை
2011
11:07
பண்ருட்டி : பண்ருட்டி தட்டாஞ்சாவடி ஸ்ரீகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் , வினாயகர், பாலமுருகன், நவக்கிரக சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 10ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. 11ம் தேதி காலை சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், புனித மண் எடுத்தல் நடந்தது. 12ம் தேதி காலை 5.30 மணியளவில் பஞ்சாஸ்திர ஹோமம், மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் 13ம் தேதி விசேஷ சந்தி யாகசாலை பூஜை ஆரம்பம், மாலை 5மணிக்கு யந்திரஸ்தாபனம், ஸ்துபீகலச ஸ்தபானம், பிரம்மச்சாரி கன்னிகா பூஜை, தம்பதி பூஜை, வடுகு பூஜைகள் நடந்தன. நேற்று 14ம் தேதி அதிகாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள், கோ பூஜை துவங்கி 5.30க்கு பிம்ப சுத்தி, 6.45 திரவிய பூர்ணாகுதி, 7மணிக்கு நாடி சந்தானம், 7.30க்கு மகா பூர்ணாகுதி, 8.15க்கு யாத்ராதானம் குடங்கள் புறப்பட்டு 9 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 9.45 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும், மாலை 5 மணிக்கு அரசுவேம்பு திருமணம், இரவு 8 மணிக்கு அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.