பதிவு செய்த நாள்
01
ஆக
2015
12:08
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் துர்க்கையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார பூஜை நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலம ங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி மாத மூன்றாவது வெள்ளி உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. துர்க்கையம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்த பின் சந்தனகாப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினர். இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்ப@ரஸ்வரர், முத்துமாரியம்மன், திரவுபதி அம்மன், பத்ரகாளியம்மன், கங்கையம்மன், வாŒவி கன்னிகா பர@மஸ்வரி, கமலா நேரு தெரு காமாட்சி அம்மன், அண்ணா நகர் துர்க்கையம்மன், அரசமரத்தடி களரி முனியப்பர் கோவில், சோமண்டார்குடி ÷ சாமநாதீஸ்வர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், முடியனுõர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், விருகாவூர் சர்க்கரை விநாயகர் ஆகிய @காவில்களிலும் சிறப்பு அபி@ஷக, ஆராதனைகள் நடந்தது.