தியாகதுருகம்: நாகலூர் பொன்னியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த நாகலூர் பொன்னியம்மன் கோவில் திரு விழா, கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மன் திருவீதியுலா நடந்தது. கடந்த 29ம் தேதி கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து அய்யனார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று 9ம் நாள் திருவிழாவை முன் னிட்டு காலை மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப் பட்டது. மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா மற்றும் திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.